விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேசை அழைத்துக்கொண்டு தாமரை சென்றார். இன்னொரு பக்கம் தமிழுக்கு போன் செய்து ஜெனி, தனக்கு திருமண ஏற்பாடு செய்வது பற்றி சொல்லி அழுதார். தமிழ், சேது இருவருமே ஜெனிக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். அடுத்த நாள் காலையில் தமிழ்- சேது இருவரும் ராஜாங்கத்திடம் ஜெனியின் காதலை பற்றி பேச சொன்னார்கள். ராஜாங்கமும் ஜெனியின் அப்பாவிடம் பேச கிளம்பினார். ஆனால், சகுன தடையாக ராஜாங்கம் காலில் அடிபட்டு விடுகிறது. உடனே ராஜாங்கம் அங்கேயே உட்கார்ந்து கொண்டார். பிரச்சனை வருமோ என்று அப்பத்தா ரொம்பவே வருத்தப்பட்டார்

ஜெனியின் காதலுக்காக ராஜாங்கம் ஜெனியின் அப்பா தாமஸிடம் பேசப் போனார். தாமசின் உறவினர் ராஜாங்கத்திற்கு எதிர்க்கட்சிக்காரர். அதனால் தாமஸ், ராஜாங்கம் பேசுவதையெல்லாம் எதிர்க்கட்சிக்காரர் கேட்பதற்காக போனை ஆனில் வைத்திருந்தார். ராஜாங்கம், ஜெனியின் காதலுக்காக பேசுகிறார். கோபத்தில் தாமஸ், உன் வீட்டு பிரச்சனையை மட்டும் பார். கட்சிப் பிரச்சினையை பார். என் வீட்டு விஷயத்தில் தலையிடாதே. உன்னுடைய மரியாதையை காப்பாற்றிக்கொள் என்று அவமரியாதையாக பேசி விட்டார்.
சின்ன மருமகள்:
இதனால் கோபத்தில் சேது, தாமஸை அடிக்கப் போனார். ராஜாங்கம் தடுத்து கூப்பிட்டு வந்து விட்டார்.
பின் வீட்டிற்கு வந்த ராஜாங்கம், தேர்தல் முடியும் வரை எந்த பிரச்சனையிலும் எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்த பின் பேசிக்கொள்ளலாம் என்றார். தமிழ் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பின் ஜெனி, தமிழுக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது ஜெனியின் அப்பா, அம்மா இருவருமே ஜெனியை அடித்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொன்னதால் சேது- தமிழ் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி, தமிழின் மொபைலை எடுத்து வந்து ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார். அதில் ஐஸ்வர்யா, தமிழின் அப்பாவிற்கு ஃபோன் செய்து ஜெனியின் காதலுக்கு உதவ சொல்லி தமிழ் குரலில் பேசுகிறார். தமிழின் அப்பா சின்ன பாண்டியுமே, ராஜாங்கம் செய்ய சொன்னதால் ஜெனியின் காதலை சேர்த்து வைக்க ஒத்துக் கொள்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்கு பின் சக்திவேலுக்கு போன் செய்து தன்னுடைய திட்டத்தை பற்றி சின்ன பாண்டி சொல்கிறார். சக்தி தயங்கினாலும் பிறகு ஒத்துக் கொள்கிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி வருவதற்குள் போனை ஈஸ்வரி உள்ளே வைத்து விடுகிறார். தமிழ்-சேது இருவருமே எமோஷன் ஆக ஜெனியின் காதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் சின்ன பாண்டி- சக்தி இருவரும் ஜெனியின் வீட்டிற்குள் வருகிறார்கள். ஜெனியின் அப்பா அந்த சமயம் பார்த்து வெளியே வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






