விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது தன் அப்பாவின் நிலமையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அதன்பின் ஈஸ்வரி, ராஜாங்கத்திற்கு எதிரியிடம் போன் செய்து அவரை பழிவாங்க எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தார். அதற்குப்பின் ராஜாங்கத்தை விருது விழாவிற்கு வர சொன்னார்கள். ராஜாங்கம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. கட்டாயப்படுத்தினால் ராஜாங்கம் ஒத்துக் கொண்டார் பின் டிவி, நியூஸ் சேனல் என அனைத்திலும் சக்தி கொலை செய்யப்பட்டு இருக்கும் செய்தி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இறந்து போனது சக்தி தான் என்பது தெள்ளத்தெளிவாகி விடுகிறது. உடனே தாமஸின் வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள். அப்போது ஜெனி, சக்தி எங்கே? என்ன ஆனது? என்று விசாரித்தார். போலீஸ் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். அதிர்ச்சியில் ஜெனி கத்துகிறார். இதற்கெல்லாம் காரணம் என்னுடைய அப்பா தான் என்று சொன்னார். போலீஸ், தாமசை கைது செய்து சென்றார்கள். இன்னொரு பக்கம் விருது வழங்கும் விழாவில் ராஜாங்கத்தை ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜாங்கத்திற்கு விருது கொடுக்க வரும் போது போலீஸ் அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள்.
சின்ன மருமகள்:
ராஜாங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. போலீஸ், சக்தியை கொலை செய்த வழக்கில் தாமஸ், உங்களையும் கைது செய்கிறோம். அந்த கொலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தாமஸ் சொல்லி இருக்கிறார். அதனால் விசாரணைக்கு நீங்கள் வரவேண்டும் என்றார். பின் போலீஸ் ஸ்டேஷனில் ஜெனி, சக்தியை கொன்றது என்னுடைய அப்பாவும் அமைச்சர் ராஜாங்கம் தான். அவர்கள் இருவரையும் சும்மா விடாதீர்கள் என்று உண்மை அறியாமல் ஜெனி கூறிக் கொண்டிருந்தார். ஜெனி அளித்த பேட்டி எல்லாம் டிவியில் வருகிறது. அதை பார்த்து ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே கதறி அழுதார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போலீஸ், சக்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்கிறார்கள். ராஜாங்கம், எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை. தாமஸ் கட்சி விஷயமாக பேச வர சொன்னார். அதனால் தான் வந்தேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார். சேது தன் அப்பாவை வெளியில் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த தமிழிடம் சக்தி இறந்து போன விஷயத்தையும், ராஜாங்கம் கைது செய்த விஷயத்தையும் சொல்கிறார்கள். தமிழ்செல்வி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்.

சீரியல் ட்ராக்:
மோகனா, தமிழை மோசமாக திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து ராஜாங்கம் கட்சியின் தலைவர், சத்தி கொலை வழக்கில் ராஜாங்கத்திற்கும் சம்மந்தம் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கிவிடுகிறோம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார். இதை கேட்டு அப்பத்தா நொறுங்கிப் போகிறார். இன்னொரு பக்கம் இந்த வழக்கை விசாரிக்க உயர் அதிகாரி ஒருவரை சிபாரிசு செய்து இருக்கிறார்கள். அவர், ராஜாங்கத்திடம் ரொம்ப ராங்காக நடந்து கொள்கிறார். அது மட்டும் இல்லாமல் ராஜாங்கத்தை ஜெட்டி பனியன் உடன் கட்டி வைத்து அடிக்கிறார். இதை பார்த்த சேது ரொம்பவே
மனம் உடைந்து அழுகிறார்.






