விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், தாமஸ் சொல்வதெல்லாம் பொய். நான் குடிக்கவில்லை, நான் சக்தியை கொலை செய்யவில்லை என்று கத்துகிறார். அதற்குப்பின் வழக்கறிஞர், ஜாதி வெறிக்காக தான் ராஜாங்கம் இப்படி செய்தார். ஜெனிக்கு திருமணம் செய்து வைத்ததே ராஜாங்கத்தின் மருமகளும் அவருடைய அப்பாவும் தான் என்றார். எல்லா சாட்சிகளும் ராஜாங்கத்திற்கு எதிராக இருக்கிறது. பின் ராஜாங்கத்திடம் விசாரணை நடந்தது. ராஜாங்கம், எனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தமில்லை என்றார்.

ஆதாரங்கள் எல்லாமே ராஜாங்கத்திற்கு எதிராக இருக்கிறது. இதனால் நீதிபதி, ராஜாங்கம்-தாமஸ் இருவரையும் குற்றவாளிகள் என்று சொல்லி தீர்ப்பு வழங்கப் போனார். அந்த சமயம் பார்த்து சேது அங்கு வந்து விட்டார். பின் சேது, சக்தியை உயிருடன் அழைத்து வந்தார். சக்தியை பார்த்தவுடன் கோர்ட்டில் உள்ள எல்லோருமே அதிர்ந்து போனார்கள். ஜெனி எமோஷனலாக அழுதார். பின் சக்தி, தாமஸின் ஆட்கள் என்னை அழைத்து சென்று கொலை செய்ய திட்டமிட்டது உண்மை தான். ஆனால், ராஜாங்கத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
சின்ன மருமகள்
தாமஸ், பார்ட்டி வைப்பதாக சொல்லி ராஜாங்கத்தை அழைத்தார். ஆனால், ராஜாங்கம் திட்டிவிட்டு என்று சென்று விட்டார். தாமஸ் ஆட்கள்தான் என்னை கொலை செய்யப் பார்த்தார்கள். ஆனால், நான் அங்கிருந்து தப்பித்து வந்தேன். பின் தவறி ஒரு குழியில் விழுந்துவிட்டேன். அதற்கு பிறகு தான் சேது எனக்கு உதவி செய்தார் என்று நடந்தது எல்லாம் சொன்னார். அப்போதுதான் ராஜாங்கத்திற்கு நிம்மதியாக இருக்கிறது. அதற்குப்பின் இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் மாற்றி வைத்த டாக்டர்,அரசியல்வாதி எல்லாம் சேது அழைத்து வந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நீதிமான், டாக்டர் இருவரும் சேர்ந்துதான் வேறொரு பிணத்தை சக்தி என்று மாற்றி ரிப்போர்ட் கொடுத்திருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்து விடுகிறது. இதனால் நீதிபதி, பொய்யான வழக்கு போட்ட தாமஸ், அவருக்கு உடந்தையாக இருந்த நீதிமான், டாக்டர் மூவருக்குமே தண்டனை கொடுத்திருக்கிறார். பின் இந்த வழக்கில் இருக்கும் ராஜாங்கத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் ராஜாங்கத்தை விடுதலை செய்கிறார். சேது வீட்டில் எல்லோருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். பின் இதைப் பற்றி கருப்பன், தமிழுக்கு போன் செய்து சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
தமிழும் ரொம்ப சந்தோஷப்படுகிறார். கோர்ட்டில் வெளியே வந்த ராஜாங்கம், தன்னுடைய மகன் சேதுவை பார்த்து எமோஷனாக கட்டிப்பிடித்து அழுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ராஜாங்கத்திடம் நலன் விசாரிக்கிறார்கள். அதற்குப் பின் சேது, தன்னுடைய அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்து அவருக்கு தண்ணீர் ஊற்றி எல்லா பிரச்சினையும் முடிந்து விட்டது என்று சொல்கிறார். மீண்டும் எமோஷனல் ஆன ராஜாங்கம் சேதுவை கட்டிப்பிடித்து அழுகிறார்.






