விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஷ் பிச்சையை சந்திப்பதற்காக சாவித்திரி- தாமரை இருவரும் கோவிலுக்கு சென்றார்கள். அங்கு காமேஷ் பிச்சை, தாமரையை காதலிப்பதாக ஒத்துக் கொண்டார். இதனால் சாவித்திரி ரொம்பவே சந்தோசப்பட்டார். அந்த சமயம் பார்த்து சாவித்திரிக்கு போன் செய்த ஈஸ்வரி, வீட்டிற்கு வர சொன்னார். வீட்டில் ராஜாங்கம் பார்த்த மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தார்கள். சீக்கிரமாகவே கல்யாணத்தை வைத்து விடலாம் என்று பேசி இருந்தார்கள். சாவித்திரி- தாமரை இருவரும் கல்யாணத்தை தடுக்க நினைத்தார்கள். ஆனால், ராஜாங்கம் எல்லா முடிவும் எடுத்து விட்டார்.

தாமரையால் தான் காதலிக்கும் விஷயத்தை வெளியே சொல்ல முடியாமல் தவித்தார். வீட்டில் எல்லோருமே தாமரை நிச்சயதார்த்தத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் தாம்பூலத்தை மாற்றி விட்டார்கள். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் தோழி ஜெனிக்கு அவசர அவசரமாக கல்யாணம் ஏற்பாடுகள் செய்தார்கள். ஜெனி கல்லூரிக்கு வராததால் தமிழுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது ஜெனி காதலிக்கும் முருகன், தமிழ்ச்செல்விக்கு போன் செய்து விசாரித்தார்.
சின்ன மருமகள்:
இன்னொரு பக்கம் காமேஸ் பிச்சையை சந்தித்த தாமரை, எங்கள் வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள் என்றெல்லாம் சொன்னார். காமேஷ், உங்கள் மாமா குறித்த அதே தேதியில் நான் தான் உனக்கு தாலி கட்டுவேன். யாராலும் அதை தடுக்க முடியாது என்றார். இதையெல்லாம் சித்ரா வீடியோவாக எடுத்துக் கொண்டார். இன்னொரு பக்கம் கல்லூரிக்கு தமிழை பார்க்க சேது சென்றிருந்தார். அப்போது சேது, தமிழுக்கு சாப்பிட ஜூஸ் கொடுத்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கல்லூரியில் சேது- தமிழ் இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த ப்ரொபசர், கிளாஸ் இருக்கு நேரமாகவில்லையா? அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறாயே? என்று தமிழை திட்டுகிறார். தமிழும் கல்லூரிக்கு சென்று விடுகிறார். அதற்கு பின் வீட்டில் ராஜாங்கத்திற்கு சர்வதேச விருது கிடைத்திருப்பதாக டிவியில் நியூஸ் வருகிறது. இதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷப்படுகிறது. கட்சியின் தலைவர் ராஜாங்கத்திற்கு போன் செய்து வாழ்த்துக்கள் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் தாமரை, சாவித்திரி இருவரும் கல்யாணத்தை எப்படி நிறுத்த வேண்டி நிறுத்துவது என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த சித்ரா, காமேஸ் உடன் தாமரை பேசியிருந்த புகைப்படத்தை காண்பித்து மிரட்டுகிறார். தாமரை ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். பின் ஈஸ்வரி, கல்யாணம் நடக்கப்போகிறது, ஒழுங்காக நடந்து கொள் என்று அறிவுரை சொல்லிவிட்டு செல்கிறார்.
இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, ஜெனிக்கு போன் செய்து விசாரிக்கிறார். அப்போது ஜெனியின் அம்மா, போனை பிடுங்கிக் ஜெனிக்கு திருமணமாகப் போகும் விஷயத்தை சொல்கிறார்.






