விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி, சேது சொன்ன வார்த்தை எல்லாம் நினைத்து கோபப்பட்டார். பின் சேதுவின் புகைப்படத்தை பார்த்து கோபப்பட்ட தமிழ் செல்வி, அதை தூக்கி போட்டு உடைக்கிறார். தமிழ் செல்வி அம்மா, எவ்வளவோ சமாதானம் செய்ய பார்த்தார். ஆனால், தமிழ்ச்செல்வி கேட்கவில்லை. இன்னொரு பக்கம் சேது வீட்டிற்கு வந்தவுடனே ஈஸ்வரி வழக்கம் போல தமிழுக்கு சப்போர்ட்டாக பேசுவது போல நடிக்கிறார். கோபத்தில் சேது, அவளைப் பற்றி இந்த வீட்டில் யாரும் எதுவும் பேசக்கூடாது. அவளுக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கத்தி விட்டு சென்றார்.

கோர்ட்டில் ராஜாங்கம்- தாமஸ் வழக்கு நடக்கிறது. ராஜாங்கத்தை போலீஸ் அழைத்து வந்தார்கள். ராஜாங்கத்தை பார்த்து அவருடைய குடும்பம் ரொம்பவே கதறி அழுதார்கள். ஈஸ்வரி உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. ஜெனி, என்னுடைய அப்பாவும் ராஜாங்கமும் சேர்ந்து தான் சக்தியை கொலை செய்து விட்டார்கள் என்று சொன்னார். அதற்குப்பின் தாமசை விசாரித்தார்கள். தாமஸ், அவன் வேறு ஜாதியை சேர்ந்தவன்.
சின்ன மருமகள்:
அதனால் நானும் ராஜாங்கமும் ஒன்றாக சேர்ந்து தான் சக்தியை கொலை செய்ய திட்டம் போட்டோம் என்றார். உடனே ராஜாங்கம், அவர் சொல்வதெல்லாம் பொய். நான் குடிக்கவில்லை, நான் சக்தியை கொலை செய்யவில்லை என்று கத்துகிறார். அதற்குப்பின் வழக்கறிஞர், ஜாதி வெறிக்காக தான் ராஜாங்கம் இப்படி செய்தார். ஜெனிக்கு திருமணம் செய்து வைத்ததே ராஜாங்கத்தின் மருமகளும் அவருடைய அப்பாவும் தான் என்றார். எல்லா சாட்சிகளும் ராஜாங்கத்திற்கு எதிராக இருக்கிறது. பின் ராஜாங்கத்திடம் விசாரணை நடந்தது. ராஜாங்கம், எனக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தமில்லை என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் ஆதாரங்கள் எல்லாமே ராஜாங்கத்திற்கு எதிராக இருக்கிறது. இதனால் நீதிபதி, ராஜாங்கம்-தாமஸ் இருவரையும் குற்றவாளிகள் என்று சொல்லி தீர்ப்பு வழங்கப் போகிறார். அந்த சமயம் பார்த்து சேது அங்கு வந்து விடுகிறார். பின் சேது, சக்தியை உயிருடன் அழைத்து வருகிறார். சக்தியை பார்த்தவுடன் கோர்ட்டில் உள்ள எல்லோருமே அதிர்ந்து போகிறார்கள். ஜெனி எமோஷனலாக அழுகிறார். பின்
சக்தி, தாமஸின் ஆட்கள் என்னை அழைத்து சென்று கொலை செய்ய திட்டமிட்டது உண்மைதான். ஆனால், ராஜாங்கத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

சீரியல் ட்ராக்:
தாமஸ், பார்ட்டி வைப்பதாக சொல்லி ராஜாங்கத்தை அழைத்தார். ஆனால், ராஜாங்கம் திட்டிவிட்டு என்று சென்று விட்டார். தாமஸ் ஆட்கள்தான் என்னை கொலை செய்யப் பார்த்தார்கள். ஆனால், நான் அங்கிருந்து தப்பித்து வந்தேன். பின் தவறி ஒரு குழியில் விழுந்துவிட்டேன். அதற்கு பிறகு தான் சேது எனக்கு உதவி செய்தார் என்று நடந்தது எல்லாம் சொல்கிறார். அப்போதுதான் ராஜாங்கத்திற்கு நிம்மதியாக இருக்கிறது. அதற்குப்பின் இந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் மாற்றி வைத்த டாக்டர்,அரசியல்வாதி எல்லாம் சேது அழைத்து வருகிறார்.






