விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது வீட்டில் உள்ள எல்லோருமே தமிழுக்கு எதிராகத்தான் இருந்தார்கள். தமிழ் சொல்வதை யாரும் கேட்கவில்லை. தமிழ்செல்வி, யாரும் நம்பவில்லை என்றாலும் என் கணவர் என்னை நம்புவார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என்றார். அந்த சமயம் பார்த்து சேது வீட்டிற்கு வந்தார். கோபத்தில் சேது, ராஜாங்கம் போலீஸ் ஸ்டேஷனில் படும் கஷ்டத்தை எல்லாம் சொன்னார். அதைக் கேட்டு அப்பத்தா ரொம்பவே உடைந்து விடுகிறார். அப்போது சேது, இதற்கெல்லாம் காரணம் நீ மட்டும் தான் என்றார். தமிழ் செல்வி அதிர்ச்சியில் நிற்கிறார்

சேது, உன்னை திருமணம் செய்தது தான் மிக பெரிய தவறு. நீ என் அப்பாவின் மீது புகார் கொடுத்திருந்த போதே நான் உன்னை தலைமூழ்கி இருக்கணும். உன்னால் தான் இந்த பிரச்சனை. மரியாதையாக வீட்டை விட்டு வெளியே போ என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கொந்தளித்த தமிழ், நான் தான் உங்களை கல்யாணம் செய்து கொள்ள கேட்டேனா? உங்கள் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பியது தாமரை. ஒவ்வொரு முறையும் நீங்கள் தவறு செய்வீர்கள். ஆனால், தண்டனை எனக்கு. பின் நீங்கள் தவறு தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது நான் ஏற்றுக்கொள்ளணும்.
சின்ன மருமகள்:
ஆறு மாதத்திற்கு ஒரு முறை உங்களிடம் நான் நல்லவள் என்று தீக்குளித்து நிரூபிக்க முடியாது. உங்களுடன் வாழ்ந்தவரையும் போதும். நானே வீட்டை விட்டு போகிறேன் என் மீது தவறு இல்லை என்று தெரிந்ததும் நீங்கள் எல்லோருமே என்னிடம் மன்னிப்பு கேட்டு நிற்பீர்கள். நான் யாரையும் மன்னிக்க மாட்டேன். இனி எனக்கும் இந்த குடும்பத்திற்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறினார். பின் ஒரு குடம் தண்ணியை எடுத்து தமிழ் தலையில் ஊற்றிக் கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வி ஈர துணியோடு சாமி முன்பு கற்பூரம் ஏத்தி சத்தியம் செய்து இந்த குடும்பத்திற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று சொல்கிறார். சேது எதுவும் சொல்லாமல் கோபப்படுகிறார். பின் தமிழ்ச்செல்வி, ராஜாங்கம் வீட்டிலிருந்து நடந்தே தன்னுடைய வீட்டிற்கு செல்கிறார்.
வயிற்றில் குழந்தைகளை வைத்துக்கொண்டு தமிழ்செல்வி ரொம்ப கஷ்டப்பட்டு செல்கிறார். அக்கம் பக்கத்தில் எல்லோருமே தமிழ்ச்செல்வி நினைத்து வருத்தப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் சேதுவின் கோபத்தை தணிக்க வீட்டில் உள்ள எல்லோருமே பொறுமையாக அமைதியாக இருக்க சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
சேது, இனி தமிழ் செல்விக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அவளைப் பற்றி பேசக்கூடாது என்று கோபமாக பேசிவிட்டு செல்கிறார். அப்பத்தா, தன் மகனையும் பேரணையும் நினைத்து ரொம்பவே எமோஷனலாக அழுகிறார். பின் தன்னுடைய வீட்டிற்கு வந்த தமிழை பார்த்து அவருடைய அப்பா, அம்மா பதறுகிறார்கள். அப்போது தமிழ், எனக்கும் அந்த குடும்பத்திற்குமான உறவு அறுந்துவிட்டது என்று சொல்கிறார். இதைக் கேட்டு தமிழ்செல்வியின் அம்மா ஷாக் ஆகி நிற்கிறார்.






