விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரை, சாவித்திரி இருவரும் கல்யாணத்தை எப்படி நிறுத்த வேண்டி நிறுத்துவது என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த சித்ரா, காமேஸ் உடன் தாமரை பேசியிருந்த புகைப்படத்தை காண்பித்து மிரட்டினார். தாமரை ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் ஈஸ்வரி, கல்யாணம் நடக்கப்போகிறது, ஒழுங்காக நடந்து கொள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, ஜெனிக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது ஜெனியின் அம்மா, போனை பிடுங்கிக் ஜெனிக்கு திருமணமாகப் போகும் விஷயத்தை சொன்னார்.

தமிழ்ச்செல்வி சோகமாக இருப்பதை பார்த்து சேது விசாரித்தார். அப்போது தமிழ், என்னுடன் படிக்கும் ஜெனியும் சக்தியும் காதலிக்கிறார்கள். இதை அறிந்த ஜெனியின் வீட்டில் அவளுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஜெனி ரொம்பவே வருத்தப்பட்டார். ஏதாவது செய்யணும் என்று சொன்னார். இதற்கு பின் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். பின் சேது, தமிழ்ச்செல்வியின் தோழி ஜெனி காதல் விஷயத்தை பற்றி ராஜாங்கத்திடம் சொல்லி உதவி கேட்டார்.
சின்ன மருமகள்:
ராஜாங்கம், ஜெனி அப்பா- அம்மாவிடம் பேசிப் பார்க்கலாம். ஏதாவது செய்ய முயற்சி செய்கிறேன் என்றார். அதற்குப்பின் தமிழ், சேது இருவரும் கல்லூரிக்கு சென்று விட்டார்கள். அங்கு சக்தி, தமிழை சந்தித்து ஜெனியை பற்றி விசாரித்தார். தமிழ், ஜெனிக்கு நடக்கும் திருமணம் ஏற்படுகளைப் பற்றி சொன்னார். சக்தி ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் தாமரையின் திருமணத்திற்காக ராஜாங்கம் நகை, புடவை எல்லாம் வாங்கி தந்தார். தாமரை தன் காதலைப் பற்றி வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போனில் தாமரை, என்னுடைய மாமா 100 பவுன் நகை. 2 லட்சத்தில் புடவை வாங்கித் தந்திருக்கிறார். எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்கிறார். உடனே காமேஷ், நான் உனக்கு ஆயிரம் பவுனில் தங்கம், 2 கோடியில் புடவை என்று தயார் செய்து இருக்கிறேன். வெறும் இந்த பணத்திற்கு இப்படி சந்தோஷப்படுகிறாய் என்று பில்டப் கொடுக்கிறார். இதைக் கேட்டு தாமரை- சாவித்திரி இருவரும் வாயை பிளக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி- சித்ரா இருவரும் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள்.

சீரியல் டிராக்:
இன்னொரு பக்கம் கல்லூரியில் தமிழுக்கு பசிப்பதால் சேது சரியாக சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறார். பின் சேது-தமிழ் இருவருமே ரொம்ப சந்தோஷமாக தங்களுடைய காதலை பரிமாறி கொள்கிறார்கள். அதற்குப்பின் தமிழ்-சேது இருவரும் தாமரையை பார்த்து திருமணத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி அறிவுரை எல்லாம் செய்கிறார்கள். மனதுக்குள் கோபம் இருந்தாலும் தாமரை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப் பின் போனில் தாமரை, திருமணத்தை எப்படி தடுப்பது? என்கிறார். காமேஷ் பிச்சை, நீ தயாராக இரு. காலையில் என்னுடைய ஆட்கள் உன்னை அழைத்துக் கொண்டு வருவார்கள். கோயிலில் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறார். தாமரையும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.






