விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்- சேது இருவருமே ராஜாங்கத்திடம் ஜெனியின் காதலுக்கு உதவி செய்ய கேட்டார்கள். ராஜாங்கம் தயங்கினார். ஈஸ்வரி, தேர்தல் சமயத்தில் இதெல்லாம் தேவையில்லை என்றார். இருந்தாலும் தமிழ்ச்செல்வி கேட்டுக் கொண்டதால் ராஜாங்கம் ஒத்துக்கொண்டார். பின் ஜெனியின் அப்பாவை சந்தித்து பேசுவதற்காக போன் செய்து ராஜாங்கம் வர சொன்னார். இன்னொரு பக்கம் தனம் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா ஏளனமாக கிண்டலடித்து பேசி இருந்தார்.

ஐஸ்வர்யா மோசமாக பேசியதால் தனம் வேதனைப்பட்டு இருந்தார். அப்போது வந்த மலரிடம் நடந்ததை எல்லாம் தனம் சொன்னார். பின் ஐஸ்வர்யாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று தனம், மலர் இருவரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள். அதன்படி ஐஸ்வர்யா கீழே விழுந்தார். இன்னொரு பக்கம் தாமரை, சாவித்திரி இருவரும் இந்த பிச்சைக்கார வாழ்க்கையில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும். முதலில் காமேசை பிச்சை எடுப்பதை நிறுத்த வேண்டும். அதற்கு நான் ஏதாவது செய்கிறேன் என்றார். அப்போது காமேஸ் வந்தார்.
சின்ன மருமகள்:
காமேசை அழைத்துக்கொண்டு தாமரை சென்றார். இன்னொரு பக்கம் தமிழுக்கு போன் செய்து ஜெனி, தனக்கு திருமண ஏற்பாடு செய்வது பற்றி சொல்லி அழுதார். தமிழ், சேது இருவருமே ஜெனிக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். அடுத்த நாள் காலையில் தமிழ்- சேது இருவரும் ராஜாங்கத்திடம் ஜெனியின் காதலை பற்றி பேச சொன்னார்கள். ராஜாங்கமும் ஜெனியின் அப்பாவிடம் பேச கிளம்பினார். ஆனால், சகுன தடையாக ராஜாங்கம் காலில் அடிபட்டு விடுகிறது. உடனே ராஜாங்கம் அங்கேயே உட்கார்ந்து கொண்டார். பிரச்சனை வருமோ என்று அப்பத்தா ரொம்பவே வருத்தப்பட்டார்

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஜெனியின் காதலுக்காக ராஜாங்கம் ஜெனியின் அப்பா தாமஸிடம் பேசப் போகிறார். தாமசின் உறவினர் ராஜாங்கத்திற்கு எதிர்க்கட்சிக்காரர். அதனால் தாமஸ், ராஜாங்கம் பேசுவதையெல்லாம் எதிர்க்கட்சிக்காரர் கேட்பதற்காக போனை ஆனில் வைத்திருக்கிறார். ராஜாங்கம், ஜெனியின் காதலுக்காக பேசுகிறார். கோபத்தில் தாமஸ், உன் வீட்டு பிரச்சனையை மட்டும் பார். கட்சிப் பிரச்சினையை பார். என் வீட்டு விஷயத்தில் தலையிடாதே. உன்னுடைய மரியாதையை காப்பாற்றிக்கொள் என்று அவமரியாதையாக பேசி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் கோபத்தில் சேது, தாமஸை அடிக்கப் போகிறார். ராஜாங்கம் தடுத்து கூப்பிட்டு வந்து விடுகிறார்.
பின் வீட்டிற்கு வந்த ராஜாங்கம், தேர்தல் முடியும் வரை எந்த பிரச்சனையிலும் எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்த பின் பேசிக்கொள்ளலாம் என்கிறார். தமிழ் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப் பின் ஜெனி, தமிழுக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது ஜெனியின் அப்பா, அம்மா இருவருமே ஜெனியை அடிக்கிறார்கள்.






