தமிழ் யூடுயூப் சேனல்களில் மிகவும் பிரபலமானசமையல் யூடுயூப் சேனலான Village Cooking Channel குறித்து தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. யூடுயூபில் எத்தனையோ சமையல் சேனல் இருந்தாலும் லுங்கி, தலப்பா கட்டிக்கொண்டு கிராமத்தில் உள்ள அழகான லொகேஷனில் சமைப்பதும், சமைத்து முடித்ததை தாங்கள் மட்டும் உண்ணாமல் அருகில் உள்ளவர்கள், ஆதரவற்ற ஆசிரமங்களுக்கு பரிமாறி நம் மனதையும் நிறைய வைத்த சேனல் village cooking chennal.
இந்த சேனல் தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்து இருக்கிறது. இன்னிக்கி ஒரு புடி, always welcomes you என்ற வசனத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர்கள் இந்த village cooking டீம். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இந்த village cooking டீம் இளைஞர்களுடன் சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவியது.
அதோடு ஒரு தேசிய கட்சித் தலைவர் தமிழ் யூடுயூப் சேனலை விசிட் அடித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இப்படி ராகுல் காந்தி வந்து சென்ற வரை 70 மில்லியன் சப்ஸ்ரைபர்கள் வந்து இருந்த நிலையில் 5 மாதத்தில் 30 10 மில்லியன் சப்ஸ்ரைபர்களை பெற்று இருக்கிறது இந்த சேனல். 10 மில்லியன் என்றால் 1 கோடி பேர் என்ற இமாலய பாலோவர்ஸ். தென்னிந்தியாவிலேயே 10 மில்லியன் பாலோவர்கள் பெற்ற முதல் சேனல் அதுவும் ஒரு தமிழ் சேனல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது இந்த டீம்.
தற்போது இந்த சேனல் 2.27 கோடி சப்ஸ்ரைபர்களை பெற்று வேற லெவலில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சேனலை பிரபலங்கள் பலரும் பாராட்டி வாழ்த்தி இருக்கிறார்கள். இந்த சேனல் மூலம் மாதம் 10 லட்சம் சம்பாதித்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த சேனலை பாராட்டி தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிரஞ்சீவி பாராட்டி பேசி இருக்கிறார்.
சிரஞ்சீவி சொன்ன விஷயம் :
சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘நான் என்னுடைய அட்வொக்டேஸ் மற்றும் ஆடிட்டர்ஸ்களுடன் மீட்டிங்கில் இருந்தேன். அவர்கள் கொஞ்சம் டெக்னிலாக பேசியது எனக்கு புரியவில்லை. அவர்கள் சிலர் ப்ரசன்டேஷனை காண்பித்து பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், நான் என்னுடைய மொபைலில் என் மகள் சொல்லிய ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ என்ற தமிழத்தைச் சேர்ந்தவர்களின் யூடியூப் சேனலை பார்த்துக்கொண்டிருந்தேன்.
Village Cooking Channel-ன் வளர்ச்சி :
‘எல்லோரும் வாங்க ஆல்வேஸ் வேல்கம்ஸ் யூ” என்ற அவர்களின் அந்த வரவேற்பு நன்றாக இருந்தது. அவர்கள் சமைப்பதை நான் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஆனால், என் உடன் இருந்தவர்கள் நான் ஏதோ குறிப்புகளை எடுத்துக்கொண்டு இருக்கிறேன் என்று நினைத்து கொண்டு இருந்தனர்’ என்ற சொன்னதும் அரங்கில் சிரிப்பலை உருவானது. சிரஞ்சீவி பேசிய இந்த வீடியோ தற்போது வைரலாகி வர, Village Cooking Channel-ன் வளர்ச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.