தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் படம் குறித்து விஜய்-ரஜினி ரசிகர்கள் பஞ்சாயத்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது.
அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, தெலுங்கு நடிகர் சுனில், வசந்த் நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.
இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் இந்த மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதிலும் இந்த படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அதோடு இந்த பாடல் வரிகள் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
@Vijaysundar84 @Mani74261081
— Aravind (@Aravind_Trichy) August 7, 2023
Ippo parunga mani ….namma "ok torture sundar" kovappattu chiranjeevi sir fans kuda sandai kattuvar parunga …..aaiyayo ivara ivaru bayangaramana aal aachennu chiranjeevi sireh solra alavukku tweet varum parunga 😛
ஏற்கனவே தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் சொன்னது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் பிடித்துவிட்டார் என்றெல்லாம் சர்ச்சையை கிளப்பி இருந்தார்கள். இதனால் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பனிப்போரே நடைபெற்று வருகிறது. மேலும், மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் விமர்சித்து சோசியல் மீடியாவில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்கள் விஜய் நடித்த பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்றெல்லாம் கூறியிருந்தார். இதை பார்த்த விஜய் ரசிகர்களும் கொந்தளித்து போய் ரஜினியை விமர்சித்து பதிவிட்டு இருந்தார்கள். பின் ரஜினி ரசிகர்களும் விஜயை பங்கமாக கலாய்த்து இருக்கிறார்கள். மேலும், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, இந்த படத்தில் டான்ஸ் இல்ல, பைட் இல்ல, அதோட முக்கியமா விஜய் சாரோட பாடி லாங்குவேஜ் இல்ல. ஆனா நல்ல பொழுதுபோக்கு இருக்கு என்று கூறியதை ரஜினி ரசிகர்கள் கிண்டல் செய்து வருக்கிறார்கள்.
Team #BholaaShankar's MEGA FUN BLAST Interview loaded with Mega 🌟@KChiruTweets's Mark Timing 😍
— AK Entertainments (@AKentsOfficial) August 7, 2023
Promo out now💥
– https://t.co/DrjJiKwsu4
Full Interview Loading Tomorrow❤️🔥@MeherRamesh @AnilSunkara1 @tamannaahspeaks @iamSushanthA @AKentsofficial #BholaaShankarOnAug11 pic.twitter.com/N4JywuR4Zl
அதேசமயம் சிரஞ்சீவி அவர்களும் தன்னுடைய போலோ சங்கர் படத்தின் ப்ரோமோஷன் போது ஃபைட் இருக்கு டான்ஸ் இருக்கு காமெடி இருக்கு ரொமான்ஸ் இருக்கு என்றெல்லாம் கிண்டல் அடித்து பேசி இருக்கிறார். இதை ரஜினி ரசிகர்கள், இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா என்று கேலி செய்யும் வகையில் பதிவிட்டு இருக்கிறார். தற்போது ரஜினி ரசிகர்கள் விஜயை கலாய்க்கும் பதிவு தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.