மலையாள இயக்குனர் சித்திக் திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாள சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் சித்திக். இவர் ஆரம்ப காலத்தில் பிரபலமான இயக்குனராக இருந்த பாசில் என்பவருக்கு உதவி இயக்குனராக பணி புரிந்தார். அதற்கு பின்பு தான் இவர் இயக்குனர் ஆனார்.
இவர் இயக்குனர் மட்டுமில்லாமல், திரைக்கதை, எழுத்தாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த ராமோஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் காட் பாதர் வியட் நாம் காலனி ஹிட்லர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் மட்டும் இல்லாமல், இவர் தமிழிலும் சில படங்களை கொடுத்திருக்கிறார்.
தமிழில் நடித்த படங்கள்:
அந்த வகையில் தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளிவந்து ஹிட் கொடுத்த பிரண்ட்ஸ் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் நகைச்சுவை இன்றும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை அடுத்து பிரசன்னா நடிப்பில் வெளிவந்த சாதுமிரண்டா, விஜய்-அசின் நடிப்பில் வெளிவந்த காவலன், அரவிந்த்சுவாமி – அமலாபால் நடிப்பில் வெளியாகிய பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.
சித்திக்கின் உடல்நிலை :
அதற்குப் பின் தமிழில் படங்களை இயக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இவர் உடல்நிலை கல்லீரல் பிரச்சனை காரணமாக அவஸ்தைப்பட்டு வந்திருக்கிறார். இதனால் இவருக்கு தொடர்ந்து சிகிச்சையும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையும் அளித்து வந்தார்கள்.
தீவிர சிகிச்சையில் சித்திக் :
தற்போது அவருக்கு எக்மோர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் சித்திக்கின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாகஉள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே அவர் கூடிய விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தும் சோசியல் மீடியாவில் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.