கோவை கல்லூரி நிர்வாகி மாணவிக்கு பாலியியல் தொந்தரவு..! அதிர்ச்சி வீடியோ.!

0
1225
subramaniam
- Advertisement -

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் கல்லூரி பெண்களுக்கு கல்லூரியில் பணிபுரியும் நிர்வாகிகள் மூலம் பல்வேறு தொல்லைகள் வந்ததாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கோவையில் உள்ள பிரபல எஸ்.என்.எஸ். கல்லூரியில் மாணவி ஒருவருக்கு கல்வி நிர்வாகி ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

- Advertisement -

கோவை சரவணம்பட்டி என்ற பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் நிர்வாக இயக்குனரான சுப்ரமணியம், அதே கல்லூரியில் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 23 வயதான இளம்பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சுப்ரமணியம் செய்து வந்த சில்மிஷம் குறித்து பாதிக்கபட்ட அந்த இளம் பெண் சுப்ரமணியத்தின் மகனும், கல்லூரியின் தலைமை நிர்வாகியுமாகிய நளன் என்பவரிடம் கூறியுள்ளார். ஆனால் புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நளன், அப்பெண்ணை வேலையை விட்டு நீக்கப்போவதாகவும் , கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

-விளம்பரம்-

ஒருகட்டத்தில் சுப்ரமணியதின் தொல்லை தாங்க முடியாமல் சுப்ரமணியம் தன்னிடம் அத்துமீறி நடந்த சமயம் பார்த்து தனது செல்போன் கேமராவில் ரகசியமாக படம் எடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து அந்த பெண்ணைபணியில் இருந்து நீக்கியுள்ளது கல்லூரி நிர்வாகம்.

இதையடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த சுப்ரமணியம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரை அடுத்து சுப்பிரமணியம் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சுப்பிரமணியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement