கவுண்டமணி முதல் வடிவேலு வரை பல படங்களில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா ? – ஹீரோவில் இருந்து காமெடியனான கதை.

0
1925
Roshan-Raj
- Advertisement -

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்த திரைப்படம் தான் டிக்கிலோனா திரைப்படம். அந்த திரைப்படம் அணைத்து மக்களிடமும் சென்று சேர்ந்தது. அதில் ரோஷன்னாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தான் ரோஷன் ராஜ். இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக சில படங்களில் நடித்துள்ளார். அதன் பின் உடம்பில் ஏற்பட்ட மாற்றங்களால் சினிமா வாய்ப்பானது கொஞ்சம் கொஞ்சமாக கையை விட்டு நழுவியது. இது குறித்து அவர் கூறியது.

-விளம்பரம்-

ரோஷன் ராஜ் கூறியது:

அலைகள் ஓய்வதில்லை திரைப்பட காலகட்டத்தில் நான் ஹீரோ போல இருந்து வந்தேன். அப்பொழுது எனக்கு முள் இல்ல ரோஜா என்ற திரைப்படம் வந்தது அதில் நான் இரண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக நடித்திருந்தேன். அந்த திரைப்படத்தில் எனக்கு டூயட் பாடல் இருந்தது. அந்த படம் நன்றாகவே ஓடியது. அதன் பிறகும் எனக்கு இரண்டு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது அப்பொழுது நான் பார்ப்பதற்கு ஹீரோ போல  இருந்தேன். அப்போது நான் கொஞ்சம் உயரம் கம்மிதான்.

- Advertisement -

அந்த காலகட்டத்தில் என்னுடைய நிறமே என் திரைப்படங்கள் வாழ்க்கைக்கு பாதகமாக இருந்தது. அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்திற்கு  நடிப்பதற்கு ஆடிஷன் மூலம் சென்று உள்ளேன். சினிமாவை பொருத்தவரை எப்போதும் அதிர்ஷ்டம் இருந்தால் தான் முன்னேற முடியும்.  அதிர்ஷ்டம் இல்லாமல் சினிமாவில் வராத ரொம்பவும் கடினம். அதிஷ்ட மட்டும் இருந்தால் அதன் பிறகு எல்லாமே சரியாகிவிடும்.  ஹீரோவாக நடித்த பின் துணை கதாபாத்திரத்திற்கு நடித்ததற்கு காரணம் என்னவென்றால் முடி அனைத்தும் கொட்டி விட்டது.

நான் உடற்பயிற்சி செய்த உடம்பை கட்டு கோப்பாக வைத்திருந்தேன் அதன் பின் உடற்பயிற்சியை விடவே எனக்கு தொப்பை போட்டது. கோயம்புத்தூருக்கு சென்று கடையை பார்த்துக் கொள்ள சொன்னார் அப்பா. அங்கிருந்த கிணற்றுத் தண்ணீர் என் உடம்பு இருக்க செட் ஆகாததால் என் தலையில் உள்ள அனைத்து தலை முடியும் கொட்டிவிட்டது. அதன் பிறகு தான் நானும் வெண்ணிற ஆடை மூர்த்தியும் சன் டிவியில் ஒளிபரப்பான மீண்டும் மீண்டும் சிறப்பு நிகழ்ச்சியை பங்கு ஏற்று வந்த நிகழ்ச்சி ஆனது 10 வருடங்களுக்கு மேல் சென்றது.

-விளம்பரம்-

அதில் நான் வெண்ணிறாடை முகத்திற்கு அப்பாவுக்கு நடிப்பேன் மகனாக நடிப்பேன். பக்கத்து வீட்டுக்காரருக்கு நடிப்பேன் சொந்தக்காரராக நடிப்பேன். எனக்கு அந்த நிகழ்ச்சியில் எல்லா கதை பாத்திரங்களும் சிறப்பாக அமைந்தது. என் தலையை வைத்து தான்  திரைப்படங்களில் வாய்ப்பு வந்தது என்று எனக்கு தெரியாது. ஹீரோவாக நடிக்க வந்து தற்போது காமெடியாக நடித்துக் கொண்டிருப்பது மனதிற்குள் வேதனையாக தான் தருகிறது. என்னை காமெடி கதாபாத்திர்காகவே என்னை அழைத்தார்கள் அது மிகவும் வருத்தமாக இருந்தது.

என்னுடைய தலையின் பக்கத்தில் கேமிராவை கொண்டு வருவர்கள் எனக்கு டிக்கிலோனா திரைப்படம் தான் ரோஷன் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது. சாலையில் சென்றால் கூட அங்கு வருபவர்கள் எனது ரோஷன் என்று தான் அடையாளம் கண்டார்கள். என்னிடம் வந்து பொதுமக்கள் செல்பி புகைப்படங்கள் எடுப்பதை நான் விரும்புகிறேன்.  நிறைய பேர்  அவர்களது வீட்டு விசேஷங்களுக்கு என்னை அழைக்கிறார்கள். தற்போது மக்களுக்கு என்ன மிகவும்  பிடித்துப் போனது. என்று ரோஷன் ராஜ்குமார் மானமுருகி பேசினார்.

Advertisement