கேப்டனுக்கு அதை செய்வது தான் நடிகர் சங்கத்திற்கு பெருமை – காமெடி நடிகர் சதீஷ் கோரிக்கை.

0
262
Satheesh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சதீஷ். இவர் நடிகர் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெர்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல படங்களில் காமெடியான நடித்தார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி,விஜய், அஜித் சூர்யா என்று பலரின் படங்களிலும் காமெடியான நடிகர் சதீஷ் நடித்து இருக்கிறார். சமீப காலமாக இவர் ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் இவர் முதன்முதலாக ஹீரோவாக நடித்த படம் நாய் சேகர். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது சதிஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கான்ஜூரிங் கண்ணப்பன். அறிமுகம் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சதீஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், வி டிவி கணேஷ், ஆனந்தராஜ், நாசர், ரெடின் கிங்ஸ்லி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

சதிஷ் திரைப்பயணம்:

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. யுவன் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோட கடந்த ஆண்டு கடைசியில் வெளியான படங்களில் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் இந்த படம் தான் பெற்றிருக்கிறது. அதிலும், குறிப்பாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படத்தை விட இந்த படம் நல்ல வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

கான்ஜூரிங் கண்ணப்பன் படம் வெற்றி விழா:

மேலும், இந்த படம் 25 நாட்களுக்கு மேல் கடந்து 50க்கும் மேற்பட்ட திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வெற்றியை முன்னிட்டு திருப்பூரில் உள்ள ஒரு திரையரங்கம் வெற்றி விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் ரசிகர்களுடன் இணைந்து நடிகர் சதீஷ் படம் பார்த்து இருக்கிறார். இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுவது என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. இது ஒரு நூறாவது நாள் போல கொண்டாடப்பட வேண்டிய விஷயம் என்று பலரும் கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

சதிஷ் பேட்டி:

மேலும், இது தொடர்பாக நடிகர் சதீஷ், நம்மை விட்டு மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினால் நம் அனைவருக்கும் நன்றாக இருக்கும். நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் அவர்கள் பல நன்மைகளை செய்திருக்கிறார். அவரை பெருமைப்படுத்துவது தான் நடிகர் சங்கத்திற்கு பெருமை என்று கூறி கான்ஜூரிங் கண்ணப்பன் படம் குறித்து கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தற்போது கட்டி முடிக்கப்பட்ட நடிகர் சங்கத்திற்கு மறைந்த கேப்டன் விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்று தேமுதிக கட்சிகளும், ரசிகர்களும் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த் மறைவு:

சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு செய்தி தான் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். பின் கடந்த மாதம் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து பூரணமாக குணமடைந்து விட்டதாக விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார். பின் சில தினங்களுக்கு முன் காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்கள். விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது.

Advertisement