நடிகர் செந்திலின் டாக்டர் மகனை பார்த்திருக்கீங்களா. அவரது மருத்துவமனை இங்கு தான் இருக்கிறது.

0
178683
senthil
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் எவர் கிரீன் நகைச்சுவை நடிகராக விளங்கியவர் செந்தில். சினிமா உலகில் நகைச்சுவை பார்ட்னர்ஸ் என்று கேட்டாலே சின்ன குழந்தை கூட கவுண்டமணி– செந்தில் என்று தான் சொல்லும். இவர்களுடைய காமெடிக்கு அடிச்சுக்க இன்னும் யாரும் வரவில்லை என்று தான் சொல்லணும். அப்போதெல்லாம் இவர்களுடைய நகைச்சுவைக்காகவே படம் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவியும். ஆனால், அவர்களுக்கு பிறகு நகைச்சுவையில் யாராவது வந்தார்கள் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான். இவருடைய நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்தால் கல் நெஞ்சம் கூட கரைய வைக்கும் அளவிற்கு சிரிப்பு வரும்.

-விளம்பரம்-
Image result for Comedy Actor Senthil

- Advertisement -

கவுண்டமணி– செந்தில் நகைச்சுவை வைத்து தான் தொலைக்காட்சி சேனல்களில் கூட பல கலகலப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தார்கள். அதுவும் இவர்களுடைய வாழைப்பழ காமெடி இன்று கூட மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு இருக்கிறது. அதோடு சினிமா உலகில் நகைச்சுவை மன்னர்களாகவே விளங்கினார்கள். நடிகர் கவுண்டமணி அவர்கள் எப்போதுமே மீடியாக்கள் இருந்து சற்று விலகி இருப்பார். இதுவரை இவர் எந்த பேட்டியும் கூட அளித்ததில்லை. ஆனால், தற்போது நீண்ட காலங்களுக்கு பிறகு இந்த நகைச்சுவை திலகங்கள் மீண்டும் ஒன்றாக இணைந்து உள்ளார்கள் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷி ஆகி விட்டார்கள்.

நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள் முதன் முதலாக மதுபான கடையில் தான் பணிபுரிந்தார். பின் நாடகங்களில் சேர்ந்து நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டார். அதற்கு பிறகு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்முட்டியான் என்ற படத்தின் மூலம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. 1984 ஆம் ஆண்டு நடிகர் செந்தில் அவர்கள் கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளார்கள். இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவருடைய மூத்த மகன் மணிகண்ட பிரபு ஒரு பல் மருத்துவர். இவர் தனது அப்பா, செந்தில் பெயரில் சாலிகிராமத்தில் தான் மருத்துவமனையை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செந்திலின் மூத்த மகன் ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார் என்று குறிப்பிடத்தக்கது. இந்த படம் பூஜை எல்லாம் போட்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த படம் அப்படியே நின்றுவிட்டது. இன்னொரு மகன் சினிமாட்டோகிராபி படித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for dr manikanda prabhu

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த் குமார்- உமையாள் தம்பதியின் மகள் தான் டாக்டர் ஜனனி. மேலும், செந்தில் கலைச்செல்வி நாச்சியார் தம்பதியின் மகன் டாக்டர் மணிகண்டன் பிரபுவுக்கும், டாக்டர் ஜனனிக்கும் மதுரையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்கள் திருமணம் பிடிஆர் திருமண மகாலில் நடந்தது. திருமணத்தில் நடிகர் கவுண்டமணி அவர்கள் கலந்துகொண்டார். அதோடு கவுண்டமணி அவர்கள் அவர்களுக்கு தாலி எடுத்து திருமணத்தை தலைமை தாங்கியும் நடத்தினார். இந்த திருமணத்தில் மதுரை ஆதினம், திருநாவுக்கரசர், பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்

Advertisement