படம் கமிட் ஆன பின்னர் தான் நான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சித்தார்த்திடம் சொன்ன போது – சித்தா பட நடிகை பேட்டி

0
3317
- Advertisement -

பாலியல் வன்கொடுமைக்கு இந்த தண்டனை தான் கொடுக்கணும் என்று சித்தா பட நடிகை அஞ்சலி நாயர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி இந்த படம் பேசியிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தின் அண்ணியாகவும் படத்தின் நாயகி சிறுமியின் தாயாகவும் நடித்திருந்தவர் அஞ்சலி நாயர்.

- Advertisement -

அஞ்சலி நாயர் திரைப்பயணம்:

இதை அடுத்து இவர் லிக்கர் ஐலேண்ட், ஷலமன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களும் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அஞ்சலி நாயர் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர், சித்தா படம் வெற்றி அடையும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால், இந்த அளவிற்கு மக்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எந்த விஷயத்தை சமூகத்துக்கு சொல்ல நினைத்தமோ அது சரியாக மக்கள் மத்தியில் ரீச் ஆகி இருப்பது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. கேரளாவில் கூட படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

அஞ்சலி நாயர் அளித்த பேட்டி:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடூரம், குட் டச், பேட் டச் மட்டும் இல்லாமல் அம்மா- மகன் உறவு, அண்ணி- கொழுந்தனார் உறவு, நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் எப்படி இருக்க வேண்டும் என எல்லா உறவுகளுடைய முக்கியத்துவத்தையும் படத்தில் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். இதனால் இந்த படம் மக்களிடம் அதிக கனெக்ட் ஆகி இருக்கிறது. த்ரிஷ்யம் 2 படத்தில் நான் போலீசாக நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் ரொம்பவே பேசப்பட்டது. சித்தார்த் சாரும் பார்த்துவிட்டு போன் செய்து பாராட்டி இருந்தார். பின் சித்தா படத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையோட அம்மாவாக நீங்கதான் நடிக்கணும். நீங்கள் செய்தால் தான் இந்த கதாபாத்திரம் சரியாக இருக்கும் என்று சொன்னவுடன் எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது.

-விளம்பரம்-

சித்தா படம் குறித்து சொன்னது:

நானும் சமூக அக்கறை உள்ள படம் என்பதால் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன். இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் கன்சீவ் ஆகி விட்டேன். எனக்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை. அதற்கு பிறகு இதை குறித்து நான் சித்தார்த் சாரிடமும் இயக்குனரிடமும் சொன்னேன். ஆனால், சித்தார்த் சார் தான் வாழ்த்துக்கள் சொல்லி நீங்கதான் நடிக்கணும் நல்லா பண்ணுவீங்க என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தினார். நான் ஏழாம் மாதம் வரை படத்தில் நடித்துக் கொடுத்தேன். சித்தார்த் சார் மாதிரி ஒரு நல்ல மனிதனை பார்க்கவே முடியாது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு குட் டச், பேட் டச் எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

பாலியல் குற்றவாளிகள் தண்டனை:

மேலும், படத்தை பார்த்து நிறைய பேர் போன் செய்து பாராட்டி இருந்தார்கள். அதேபோல்கேரளாவில் நிறைய போக்ஸோ கேஸ் பதிவாகி இருக்கிறது. எங்களை பொறுத்தவரை பாலியல் குற்றவாளிகளை அப்படியே நடுரோட்டில் நிற்க வைத்து தண்டனை தரனும். அப்போதான் இந்த மாதிரி தப்பு பண்ண கூடாது என்று ஒவ்வொரு ஆண்களுக்கும் பயம் வரும். குற்றங்களும் குறையும். போலீஸ் பாலியல் குற்றவாளிகளை கைது பண்ணி ஜெயிலில் போட்டு மூன்று வேளை சாப்பாடு போட்டு எல்லா வசதிகளும் செய்து கொடுப்பார்கள். அவர்களும் சொகுசா வெளியில் வந்து திரும்பவும் தப்பு செய்வார்கள். அதனால் பாலியல் கொடூரன்களை ரோட்டில் நிக்க வைத்துக் கொல்வது தான் சரியான தண்டனை. அந்த மாதிரியான கொடூரன்கள் வாழ்ந்து என்ன பண்ண போறாங்க? குட் டச், பேட் டச் பற்றி பெண் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, ஆண் குழந்தைகளுக்கும் சின்ன வயதிலிருந்து சொல்லித் தரணும் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

Advertisement