சிவகார்த்திகேயன்-ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு வந்து இருக்கும் புதிய சிக்கல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
அதிலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான், மாவீரன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று பாக்ஸ் ஆபிசில் இடம் பிடித்து இருந்தது. இதை அடுத்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் அயலான். இந்த படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன்-ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி:
பல சிரமங்களுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளியாகி இருந்தது. ஏலியன் ஜானரில் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். மேலும், எதிர்பார்த்தது போல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. பிரபலங்கள் பலருமே இந்த படத்தை பாராட்டி இருக்கிறார்கள். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது.
எஸ்கே 23 படம் குறித்த தகவல்:
கடைசியாக ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் 2020 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த தர்பார் படத்தை இயக்கியிருந்தார். மூன்று வருடங்கள் அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். தற்போது அவர்
சிவகார்த்திகேயனை வைத்து எஸ்கே 23 படம் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இந்த எஸ்கே 23 படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பணிகள் பூஜை உடன் தொடங்கியது.
எஸ்கே 23 படத்திற்கு வந்த சிக்கல்:
மேலும், இந்த படத்தில் மோகன்லால், வித்யூத் ஜம்வால் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஆக்சன் என்டர்டைனராக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்திருக்கும் புதிய சிக்கல் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 படத்திற்கு வெளி மாநில அவுட்டோர் யூனிட்டுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
தென்னிந்திய outdoor யூனிட் புகார்:
இதனால் தென்னிந்திய outdoor யூனிட் ஊரிமையாளர்கள், இன்றிலிருந்து எந்த திரைப்படத்திற்கும், சீரியல்களும் அவுட்டோர் யூனிட் வழங்க மாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறது. காரணம், ஏற்கனவே வெளிமாநில யூனிட்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லியும் சிலர் விதிமுறைகளை மீறி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் பட குழுவும் வெளி மாநில அவுட் டோர் யூனிட்களை பயன்படுத்தியிருப்பதால் இந்த பிரச்சனை உருவாகி இருக்கிறது. இதற்கு சிவகார்த்திகேயன் பட குழுவினர் தரப்பில் என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.