முதன் முறையாக தன் அம்மாவை வெளி உலகத்துக்கு காட்டிய விவேக்..! புகைப்படம் உள்ளே

0
943
Actor vivek
- Advertisement -

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று அழைக்கபடுபவர் காமெடி நடிகர் விவேக்.தனது பயணத்தை மேடை நகைச்சுவை கலைஞ்சராக தொடங்கினார். பின்னர் 1987 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பிறகு பல குணசித்ர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

படங்களில் சமூக அக்கறையுடன் மக்களுக்கு பல கருத்துக்களை சொன்ன பழம் பெரும் காமெடி நடிகர் கலைவாணரை போல இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனையும் போன்ற விஷயங்களை சொன்னதால் இவரை மக்கள் சின்ன கலைவாணர் என்று அழைத்து வருகின்றனர்.

- Advertisement -

இவ்வளவு ஆண்டுகள் சினிமா துறையில் இருந்து நடிகர் விவேக் தனது குடும்ப நபர்கள் யார் யாரென்று இதுவரை வெளிக்காட்டியதே கிடையாது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் அம்மாவின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தாமே வெளியிட்டுள்ளார் நடிகர் விவேக். நீண்ட ஆண்டுகளுக்கு வெளியான விவேக்கின் அம்மாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் தான் அவரது அம்மாவா என்று தெரிந்து கொண்டனர்.

Advertisement