அந்த அளவுக்கு என் மூஞ்சி கிடையாது.! அந்த தகுதியும் எனக்கு இல்ல.! யோகி பாபு வேதனை பேச்சு..!

0
200
Yogi-babu

தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றனர்.

இதில் காமெடிய நடிகர் யோகி பாபு சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” என்ற படத்தில் நயன்தாராவை காதலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து நயன்தாராவுடன் லவ் பாடல்களிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக யோகி பாபு இனிமேல் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக சமூக வலைத்தளத்தில் சில செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், அது முற்றிலும் வதந்தி என்று கூறி நடிகர் யோகி பாபு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்கள்.