போட்டியாளர்களுக்கு கையை விரித்த மாஸ்டர் செப் குழு – புலம்பும் போட்டியாளர்கள். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?

0
515
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்க்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி தான் மாஸ்டர் செஃப். இது சமையல் போட்டிக்கான நிகழ்ச்சி. அதுவும் மாஸ்டர் செஃப் ஒன்னும் புதிய கான்செப்ட் கிடையாது. 45 நாடுகளில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் மாஸ்டர் செஃப். மேலும், இந்த நிகழ்ச்சி பிரிட்டனில் தான் முதல் முறையாக ஹிட்டானது. அதற்கு பிறகு இந்த நிகழ்ச்சி பல நாடுகளிலும் ஒளிபரப்பபட்டது. அதே கான்சப்ட்டில் தான் இந்த நிகழ்ச்சியை கடந்த ஆண்டு சன் டிவி துவங்கி இருந்தது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் விஜய் சேதுபதி. இந்த நிகழ்ச்சி ஓரளவு தான் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பான ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். பின் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி வெற்றியாளர்:

இந்த நிகழ்ச்சியில் 4 போட்டியாளர்கள் மட்டும் பைனலுக்கு சென்று இருந்தார்கள். இறுதி போட்டியில் வின்னி, நித்தியா, தேவகி மற்றும் கிருத்திகா என 4 பேர் பைனலிஸ்ட்டாக தேர்வாகி இருந்தனர். இந்த நான்கு பேரில் தேவகி தான் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பின் தேவகிக்கு மாஸ்டர் செஃப் படம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். பிறகு இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் வருமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து போட்டியாளர்கள் பலரும் புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி குறித்து எழும் புகார்:

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு அவர்கள் தரப்பில் செய்த போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை திருப்பி அளிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு மாஸ்டர் செஃப் குழுவினர் வாக்குறுதி தந்து இருந்தார்கள். ஆனால், நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு செல்லவில்லை என்று நினைத்தார்களோ? என்னவோ தெரியவில்லை? போக்குவரத்து பணம் எதையும் யாருக்கும் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் போட்டியாளர்கள் பேச முயன்றபோது போட்டியாளர்களுக்கு அவர்கள் சரியான பதில் கொடுக்கவில்லை.

-விளம்பரம்-

போட்டியாளர்களை ஏமாற்றிய மாஸ்டர் செஃப்:

அதனால் போட்டியாளர்களில் சிலர் குறைந்தபட்சம் காசு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதுக்கும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மறுத்துவிட்டார்கள். இதனால் இந்த விவகாரத்தை விடக்கூடாது என்று சமூக வலைத்தளங்கள் மூலமாக போட்டியாளர்கள் பேசி வருகிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் கருத்து போட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளாக சென்று கொண்டு இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இருந்தாலும் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு கிடைக்கவில்லை. மேலும், இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தாலும் அட்ட பிளாப் என்றே சொல்லலாம். இதனால் இந்த நிகழ்ச்சி இரண்டாம் பாகம் வருமா? என்பது தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கொடுத்து வரும் புகார்களுக்கு தற்போது சோசியல் மீடியாவில் மாஸ்டர் நிகழ்ச்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு மாஸ்டர் செஃப் குழுவினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement