‘அஞ்சாமை’ படக்குழு மீது பாய்ந்த புகார் – விதார்த், வாணி போஜனை கைது செய்ய வேண்டும் – சலசலப்புக்கு காரணம் இதோ

0
320
- Advertisement -

சமீபத்தில் வெளியான ‘அஞ்சாமை’ படத்தில் நடித்த நடிகர்கள் விதார்த் மற்றும் வாணி போஜன் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என புகார் வந்துள்ளதுதான் இப்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகர் விதார்த், வாணி போஜன், கிரித்திக் மோகன், ரகுமான், ராமர் ஃபுல் பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ் பி சுப்புராமன் இயற்றியுள்ளார். தகுதி தேர்வின் பாதிப்புகளை பற்றியே இயக்குனர் படமாக்கி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், அரசுப் பள்ளியில் படிக்கும் விதார்த்தின் மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுகிறார். மருத்துவராக வேண்டும் என கனவோடு இருக்கும் அவரின் மகனுக்கு மத்திய அரசு அமல்படுத்தப்பட்ட ‘மருத்துவக் கல்விக்கான தகுதி தேர்வு’ பெரும் தடையாக உள்ளது. தொடர்ந்து குடும்பத்தில் ஏற்படும் இழப்பையும் தாண்டி விதார்த்தின் மகன் மற்றும் வழக்கறிஞராக நடிக்கும் ரகுமான் எப்படி போராடுகிறார்கள் என்பதை படமாக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

அஞ்சாமை :

அதுபோல் தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் பல்வேறு தற்கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனை காரணம் காட்டி எல்லா மாநிலங்களிலும் உள்ள கட்சிகள் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் நீட் தேர்வு அவசியமா? அதனால் ஏழை மாணவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை மையமாக கொண்டு உருவாக்கிய படம் தான் ‘அஞ்சாமை’

பொதுமக்களை ஈர்த்தது:

அதனைத் தொடர்ந்து இப்படம் பொதுமக்கள் பலரின் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், தற்போது காவல்துறையில் அஞ்சாமை படத்தின் மீது புகார் ஒன்று அழைக்கப்பட்டுள்ளது. காவல்துறையை அளிக்கப்பட்டுள்ள புகாரில், நீட் தேர்வை எதிர்க்கும் வகையில் அஞ்சாமை படமாக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்துவது போல் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளது.

-விளம்பரம்-

புகார் குறித்து:

அதனால் அஞ்சாமை படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் கைது செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் பலரின் பாராட்டைப் பெற்ற படக்குழுவினருக்கு இப்படி நடந்ததால் அது சினிமா உலகில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

விதார்த் குறித்து:

தமிழ் சினிமாவில் ‘மைனா’ படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் நடிகர் வித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஆரம்பத்தில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான். மின்னலே, மௌனம் பேசியதே, ஸ்டுடென்ட் நம்பர் 1, சண்டக்கோழி போன்ற படங்களில் நடித்துள்ளார். சிறந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் விதார்த் இப்போது மேலும் பல படங்களில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement