மன்சூர் விஷயத்தில் சேரியை இழுத்த குஷ்பூ – கண்டனம் தெரிவித்த ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்

0
631
Kushboo
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் மன்சூர் அலிகான் குறித்த சர்ச்சை தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் படத்தில் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. படத்தில் நானும் திரிஷாவும் இருக்கிறோம். லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம். அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு, ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால், இங்கே அப்படி காட்சி இல்லை.

-விளம்பரம்-

எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லாது. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று கூறி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பின் நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

குஷ்பூ பதிவு:

இதனை அடுத்து மன்சூர் அலிகான் சர்ச்சை குறித்து நெட்டிசன் ஒருவர் குஷ்பூ கொடுத்த பதில், திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது. ஆனால், என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண் விழித்துப் பாருங்கள். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது என்று பதிவிட்டிருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

தற்போது குஷ்பூவின் பதிவில் ‘சேரி மொழி’ என்று பயன்படுத்தியது குறித்து தான் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் சேர்ந்த கனகராஜ், “நீங்கள் தவறிழைக்கிறீர்கள் குஷ்பூ. ‘Cheri language’ என்பதன் பொருளறிந்துதான் பயன்படுத்தினீர்களா? அறியாமல் என்றால் அந்த பதிவை நீக்கிவிடுங்கள். இரண்டாவதாதாக மன்சூர் அலிகான் வீட்டுப் பெண்களின் மேன்மை அவரின் நடத்தையின்பாற்பட்டதா? முதலாவது சாதி ஆதிக்கம். இரண்டவது ஆணாதிக்கம் என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

பா.ரஞ்சித்தின் பதிவு:

இதை அடுத்து பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், குஷ்பூவின் ‘சேரி மொழி’ என்ற சொல்லை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண்களை இழிவுப்படுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு ‘சேரி மொழி’ என முத்திரை குத்துகிறார். அவதூறு மற்றும் அவமரியாதையைக் குறிக்க இந்த வார்த்தையை இயல்பாக்கம் செய்வது ஒரு சமூகத்தின் வரலாறு மற்றும் கலாசாரத்தை புறக்கணிக்கும் செயல். இது ஏற்றுக்கொள்ள முடியாது; கண்டிக்கத்தக்கது. குஷ்பூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறது.

காயத்ரி ரகுராம் பதிவு:

இவர்களை அடுத்து காயத்ரி ரகுராம், இதைச் சொல்வதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன், அதன் உணர்வை அறியாமல் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக நான் மிக அதிக வலியை உணர்ந்தேன். சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருந்தேன், என் தவறுக்காக நான் தாக்கப்பட்டேன், இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு தவறை உணர்ந்து ட்வீட்டை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புகிறேன். “சேரி மொழியை” பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement