கதிருக்கு பின்னர் பரியேறும் ஏறும் பெருமாள் கருப்பிக்கு கிடைத்த லக்.!

0
227

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் என்பவரின் இயக்கத்தில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சாதிய கொடுமைகளுக்கு எதிரான இந்தப் படத்திற்கு பல விருதுகளும் குவிந்தது.

இந்த படத்தில் கதிரின் நடிப்பை பார்த்துவிட்டு இளைய தளபதி விஜய் கதிருக்கு போன் செய்து படத்தில் மிக அருமையாக நடித்துள்ளீர்கள் என்று பாராட்டையும் தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் தான் கதிருக்கு விஜய் 63 படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பரியேறும் பெருமாள் படத்தில் கதிற்கு நிகராக பேசப்பட்டு வந்தது இந்த படத்தில் கருப்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நாய் தான். இந்த படத்தில் கருப்பி என்ற பாடல் கூட இடம்பெற்றிருந்தது. தற்போது கருப்பிக்கு வேறு ஒரு படத்திலும் கமிட் ஆகியுள்ளதாம்.

‘ஆத்தா’ என்ற படத்தில் கருப்பி தான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறதாம். புதுமுகங்களுடன் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் . இந்த படத்தில் கருப்பி தான் கதாநாயகனாம்.