விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் போட்டியாளராக நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, விசித்ரா, ஆண்ட்ரியான், ராஜ்ஐயப்பா, பாக்கியலட்சிமி VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , சிவாங்கி உட்பட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதோடு இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர்.ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இந்த முறை சிவாங்கி போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கிவந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் இவர் வெளியேறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவரது 10 ஆண்டு பழைய புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. காளையன் இத்தனை ஆண்டுகள் ஆகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இதுகுறித்து கடந்த வாரம் சிவாங்கி, காளையனிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, நீங்கள் இளமையாக இருந்தபோது உங்கள் பின்னால் பெண்கள் சுற்றினார்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு காளையன், ஆமாம். ஆனால், நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. காரணம், நான் ஒரு பெண்ணை ஓகே செய்தால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவனுடன் திருமணம் ஆகி விடுகிறது.
அதனால் தான் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு சிவாங்கி ஷாக் ஆகி இருக்கிறார்.தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியவர் காளையன். இவர் சுல்தான், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட போது பலரும் இவரை டெரர் பீஸ் என்று தான் நினைத்தனர். ஆனால்,அதற்கு மாறாக குக்கு வித் கோமாளி செட்டில் படு ஜாலியாக இருந்தார்.