முடிந்த CWC செமி பைனல் – பைனலுக்கு தகுதி பெற்ற அந்த டாப் 3 இவர்கள் தான்

0
265
- Advertisement -

‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் பைனலுக்கு தேர்வாகியிருக்கும் டாப் 3 போட்டியாளர்களின் பட்டியல் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நான்கு சீசன்கள் கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது ‘குக் வித் கோமாளி சீசன் 5’ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், தயாரிப்பு நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சியில் தாமுவுடன் மற்றொரு நடுவராக மாதம்ப்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார்.

- Advertisement -

குக் வித் கோமாளி 5:

அதேபோல், இந்த சீசனில் போட்டியாளர்களாக ஷெர்லின் ஜோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, யூடியூபர் இர்ஃபான், சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, டிடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் களம் இறங்கினார்கள். அதேபோல் இந்த சீசனில் புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிகா, KPY வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல புதுப்புது கான்செப்ட் வழங்கி இருந்தார்கள். வழக்கம்போல் கோமாளிகள் குக்குகளையும் நடுவர்களையும் கலாய்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து குறைவான மதிப்பெண்களை பெற்று ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் வசி, பூஜா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். கடந்த வாரம் திவ்யா துரைசாமி மற்றும் VTV கணேஷ் ஆகிய இரண்டு போட்டியாளர்களை திடீரென நடுவர்கள் வெளியேற்றி இருந்தார்கள்.

-விளம்பரம்-

டாப் 3 போட்டியாளர்கள்:

அதனை தொடர்ந்து இந்த வாரம் செமி பைனல் நடைபெறுவதாக அறிவித்திருந்தார்கள். அந்த வகையில், இந்த வாரம், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் செமி பைனல் நடைபெற்றது. அதில் பிரியங்கா, சுஜிதா, இர்ஃபான், அக்ஷய் கமல் ஆகியோர் களம் இறங்கி மோதி உள்ளார்கள். அதில் சீரியல் நடிகர் அக்ஷய் கமல் குறைவான மதிப்பெண்களை பெற்று போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். அதனால் இம்முறை இறுதிப் போட்டியாளர்களாக பிரியங்கா தேஷ் பாண்டே, இர்ஃபான், சுஜிதா ஆகிய மூவரும் தேர்வாகியுள்ளார்கள்.

மணிமேகலை Vs பிரியங்கா:

இது ஒரு பக்கம் இருக்க இந்த நிகழ்ச்சியை இதுவரை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி வந்தார்கள். ஆனால் நேற்று, மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து தான், போட்டியாளராக கலந்து கொண்ட பெண் தொடுப்பாளினியால் விளக்குவதாக அறிவித்திருந்தார். மணிமேகலையின் இந்த பதிவை தொடர்ந்து பிரியங்கா மீது பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நெட்டிசன்கள் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ பாண்டேவை வறுத்தெடுத்து வருகிறார்கள். அதேபோல் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பல பேர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement