ரொனால்டோ ரேஞ்சுக்கு மாறு வேடத்தில் தன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அஸ்வின் – மீம் கலாய்க்கும் நெட்சன்கள்.

0
686
aswin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் நடித்த அஸ்வின், கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓ மனப்பெண்ணே’ படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக்குவித் கோமாளி புகழ் என்று பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பின் பல சர்ச்சைகளுக்கு பின் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி இருந்தது.

- Advertisement -

அஸ்வின் பேச்சால் தள்ளிப்போன படம் :

இந்த திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், அஸ்வினின் ஆர்வக்கோளாறு பேச்சால் படத்தை ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்காது என்று படத்தின் வெளியீட்டை தள்ளிப்போட்டார்கள். இருப்பினும் கொரோனா பிரச்சனை காரணமாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை என்பதால் தைரியமாக இந்த படத்தை பொங்கல் ரிலீஸாக வெளியிட்டுஇருந்தனர். ஆனால், இந்த படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்து இருந்தது.

முதல் படமே படு பிளாப் :

இந்த படம் தமிழ் சினிமாவிற்கு புதிதான கதை ஒன்றும் இல்லை வழக்கமாக அரைக்கப்பட்ட பழைய கதை தான். முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி படு மொக்கை. இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சுதப்பி வைத்து இருக்கிறார் இயக்குனர். அஸ்வினின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இல்லை, அதிலும் குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் நடிக்க மிகவும் கஷ்டப்படுகிறார். குக்குவித் கோமாளியில் ஒர்க்கவுட்டான அஸ்வின் – புகழின் மாமா மச்சான் காம்போ படத்தில் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை.

-விளம்பரம்-

இந்த படத்திற்கும் தூங்கி இருக்கலாம் :

மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும்படி நிறைகள் இல்லை. புகழின் காமெடி டிவியில் பார்க்க மட்டுமே எடுபடும் என்பதற்கு சபாபதி படத்திற்கு பின் இந்த படமும் ஒரு உதாரணம். இப்படி படத்தில் விமர்சனம் செய்ய பல குறைகள் இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்தவர்கள் பலர் சமூக வலைதளத்தில் மீம்ஸ்களை போட்டு வச்சி செய்து வந்தனர். மேலும், 40 கதையை கேட்டு தூங்கிய அஸ்வின் இந்த படத்திற்கும் தூங்கி இருக்கலாம் என்று கேலி செய்து வந்தனர்.

மாறுவேடத்தில் அஸ்வின் :

என்னதான் இந்த படத்தை பலர் பிடிக்கவில்லை என்றாலும் அஸ்வின் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வந்தனர். அதே போல தன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுகளுக்கும் நன்றி தெரிவித்து இருந்தார். அதே போல இந்த படத்திற்கு பின்னர் பல சக்ஸஸ் மீட் எல்லாம் வைத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் Fans Meet ஒன்றை வைத்து இருந்தனர். அதில் அஸ்வின் மற்றும் என்ன சொல்ல போகிறாய் நாயகியும் பங்கேற்று இருந்தார்கள்.

மீண்டும் கலாய்க்கும் நெட்டிசன்கள் :

இந்த Fans Meet – ல் அஸ்வின் தன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் மாறுவேடத்தில் வந்து ரசிகர்களை சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ தற்போது மீண்டும் அஸ்வினை வச்சி செய்து வருகின்றனர். இதனால் மீண்டும் அஸ்வினின் பல்வேறு மீம்கள் வைரலாகி வருகிறது.

Advertisement