டேஞ்சர் சோனுக்கு வந்த 2 பேர், கடைசியில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் – CWC4ன் டாப் 5 கண்டஸ்டண்ட் முடிவானது.

0
1941
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருக்கி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, சிவகர்த்துகேயன் பட நடிகை ஆண்ட்ரியான், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளார்.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஷெரின், ராஜ் ஐப்பன், vj விஷால், கிஷோர், காளையன் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக செலப்ரேஷன், இம்யூனுட்டி என்று சென்று கொண்டு இருந்த நிலையில் இந்த சீசனில் முதல் ஆளாக ஷிவாங்கி டாப் 5 போட்டியாளராக நுழைந்தார். இதனை தொடர்ந்து விசித்ரா, மைம் கோபி, கிரன், ஆண்டி, ஸ்ருஷ்டி ஆகியோர் டாப் 5க்கு செல்ல காத்துகொண்டு இருந்தனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இன்றய எபிசோடில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் விசித்ரா, மைம் கோபி, கிரன், ஆண்டி, ஸ்ருஷ்டி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முதல் சுற்றில் சரியாக பர்பார்ம் செய்யாத கிரண் மற்றும் ஆண்டி ஆகியோர் எலிமினேஷன் சுற்றில் சமைத்தனர். இதில் இறுதியில் ஆண்டி வெளியேற்றப்பட்டார். இது பார்வையாளர்கள் உட்பட போட்டியாளர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertisement