வேற லெவலு, வேற லெவலு – பாபா பாஸ்கர் மகளுக்கு நடந்த விஷேசம் – புகைப்படத்தை பகிர்ந்த மாஸ்டர்.

0
947
baba
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த ஷோ ஒளிபரப்பான போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருந்தது.

-விளம்பரம்-

கடந்த சில வாரங்களுக்கு முன் தான் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து. இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா,கனி ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர். இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இந்த சீசனில் கோமாளிக்கு இணையாக படு ஜாலியாக இருந்தது மதுரை முத்து மற்றும் பாபா பாஸ்கர் தான்.

- Advertisement -

பாபா பாஸ்கர் தமிழிலில், 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் பொல்லாதவன், வில்லு, வேட்டைக்காரன், சிறுத்தை, மாரி என்று பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் பாபா பாஸ்கர். மேலும், இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘குப்பத்து ராஜா’ படத்தை கூட இயக்கி இருக்கிறார்.

Cook with Comali' Baba Bhakar family photos goes viral on social media -  TheNewsCrunch

ஜி வி பிரகாஷ் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் பார்த்திபன், பூனம் பாஜ்வா, யோகி பாபு என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்றது.நடன இயக்குனர், இயக்குனர் என்று பல திறமைகளை கொண்ட பாபா பாஸ்கர் தெலுங்கில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவரது மகள் வயதுக்கு வந்துள்ளார். அவருக்கு சடங்கு செய்த புகைபடத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாபா பாஸ்கர்.

-விளம்பரம்-
Advertisement