விஜய் டிவியிலே பல முறை உருவக் கேலிக்கு உள்ளான கிரேஸ் – மறைமுக பதிலடியாக அமைந்த அவரின் கல்லூரி புகைப்படம் இதோ.

0
386
grace
- Advertisement -

தமிழ் சினிமா துறை உலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழக அரசியல் வாதியும் ஆவர். மேலும்,நடிகர் கருணாஸ் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் 1970 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தமிழ் சினிமா திரை உலகில் 2001 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானர். இந்த ஒரு படத்திலேயே மக்களிடையே பரவலாக பேசப்பட்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-185.jpg

பின்னர் கருணாஸ் அவர்கள் வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து உள்ளார்.மேலும்,இவருடைய நடிப்பு திறனுக்காக பல விருதுகளை பெற்று உள்ளார். அதிலும் இவர் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் மூலம் மக்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றார். இவர் சினிமா துறையில் பின்னணி பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

பன்முகம் கொண்ட கிரேஸ் :

இது மட்டுமல்லாமல் கிரேஸ் அவர்கள் “திண்டுக்கல்லு திண்டுக்கல்லு.., ஒத்தகல்லு ஒத்தகல்லு மூக்குத்தியாம்..” போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். அதிலும் முக்கால்வாசி பாடல்கள் குத்து பாடல்கள் தான். ஆனால், இவர் பெரிய அளவு பிரபலமாகவில்லை. கிரேஸ் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.

இவர் பாடிய கிறிஸ்தவ பக்தி பாடல்கள், குத்து பாடல்கள் மற்றும் கிராமிய பாடல்கள் அனைத்தும் பிரபலமானவை.மேலும், இவரை இந்த அளவிற்கு பிரபலம் ஆனது விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் தான். இந்த நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்களே இவரது உருவத்தை வைத்து பல முறை கேலி செய்து இருக்கின்றனர். ஆனால், அதையெல்லாம் பெருந்தன்மையாகவே எடுத்துக்கொண்டார் கிரேஸ்.

-விளம்பரம்-

கிரேஸின் இளம் வயது புகைப்படம் :

ஆனால், கிரேஸ் இளம் வயதில் இவ்வளவு குண்டாக இல்லாமல் சற்று ஒல்லியாக தான் இருந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அக்கா நீங்களா இது’ என்று வாயடைத்து போய்யுள்ளனர். நடிகர் கருணாஸ் – கிரேஸ் ஆகிய தம்பதியினருக்கு ஒரு மகள், மகன் உள்ளார்கள். மேலும், மகள் பெயர் டயானா மற்றும் மகன் பெயர் கென். இவர் தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் நடிகர் கருணாஸ் அவர்களின் மகன் கென் நடித்துஇருந்தார்.

This image has an empty alt attribute; its file name is image-153.png

குக்கு வித் கோமாலியில் கிரேஸ் :

அதுமட்டும் இல்லாமல் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள். இந்த படத்தை தொடர்ந்து இவரின் ஆல்பம் பாடல் ஒன்று மாபெரும் ஹிட் அடித்தது. அதே போல கிரேஸ் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி 3யில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். பாடல், காமெடி மட்டுமல்லாது தற்போது சமையலிலும் பின்னி பெடலெடுத்து வருகிறார் கிரேஸ்.

Advertisement