விபத்து ஏற்பட்டதாக கூறிய மணிமேகலை, நலம் விசாரித்த ரசிகர்கள் – வீடியோ வெளியிட்ட மணிமேகலை.

0
1061
mani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-21.png

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் சமீபத்தில் இந்த சீசனில் கோமாளியாக பங்குபெற்று வரும் மணிமகேலைக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இது குறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள மணிமேகலை, ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை, ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை. எனக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் , நான் நலமாக இருக்கிறேன். குக்கு வித் கோமாளி செட்டை இரண்டு வாரம் மிஸ் செய்வேன். மற்ற நிகழ்ச்சி ஷூட்டிங்கை ஒரு வாரம் மிஸ் செய்வேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை பார்த்த பலரும் மணிமேகலை விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆறுதல் கூறி வந்தனர். மேலும், என்ன ஆச்சு என்று நலம் விசாரித்தனர். இதுகுறித்து தனது யூடுயூபில் வீடியோ வெளியிட்டுள்ள மணிமேகலை, ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சுடுதண்ணியை பாத்திரத்தில் வைத்தேன். அடுப்பில் இருந்து தண்ணியை பக்கட்டில் ஊற்றிய போது முழு தண்ணியை மேலே உற்றுக்கொண்டு விழுந்துவிட்டேன். இதனால் காலில் சிறிய அடிபட்டு விட்டது இன்னும் இரண்டு வாரத்தில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement