குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து நடுவர், தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் என அடுத்தடுத்து விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் பல ஹிட் நிகழ்ச்சிகளை கொடுப்பது Media Masons என்ற தயாரிப்பு நிறுவனம் தான். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போன்ற பல நிகழ்ச்சிகளை Media Masons நிறுவனம் தயாரித்து வந்தது.
இப்படி இருக்கும் நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர் சீசன் 10. இந்த நிகழ்ச்சியை Media Masons தயாரிக்கவில்லை என்றும், வேறொரு தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கிறது என்ற தகவலும் சோசியல் மீடியாவில் பரவி வந்திருந்தது. இதனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இனி நாங்கள் தயாரிக்க மாட்டோம் என்றும் Media Masons அறிவித்திருந்தது. இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்ற நிகழ்ச்சிகளை Media Masons தயாரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Media Masons நிறுவனம் பதிவு:
இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் Media Masons நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான ரவூபா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், நாங்கள் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பே தொலைக்காட்சியில் பணியாற்றத் தொடங்கி விட்டோம். விஜய் டிவியில் மட்டும் தான் நாங்கள் பணிபுரிந்தோம். இது எங்களுடைய இரண்டாவது வீடு. பல நிகழ்ச்சிகளை தயாரித்தும், பல பிராண்டுகளுக்கு ஸ்கிரிப்டுகளை கொடுத்தும் இருக்கிறோம்.
Media Masons நிறுவனம் விலகல்:
ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபிசோடுகளை இயக்கிய பிறகு இப்போது ஸ்டார் விஜய்யிலிருந்து ஓய்வெடுக்க வேண்டிய நேரம் எங்களுக்கு வந்துவிட்டது. கடந்த மே மாதம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து மட்டும்தான் நாங்கள் விலக வேண்டும் என்று நினைத்தோம். எங்களுடைய மற்ற நிகழ்ச்சிகளான குக் வித் கோமாளியும், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொடர்வோம் தான் நினைத்திருந்தோம். ஆனால், தற்போது எதிர்பாராத சூழ்நிலை காரணமாக இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நாங்கள் செய்ய மாட்டோம். கனத்த இதயத்துடன் இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலிருந்தும் வெளியேறுகிறோம். எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்குமே நன்றி என்று கூறியிருந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இயக்குனர் பதிவு:
இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி இயக்குனர் பார்த்திபன் அவர்களும் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், சில குட்பாய் ரொம்பவே கடினம். நிறைய மகிழ்ச்சியான நினைவுகளுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன். இது எங்களுக்கு ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல கடந்த நான்கு சீசன்களும் குடும்பமாக நினைவுகள் மறக்க முடியாதது. உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆசிர்வாதத்திற்கும் என்றைக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் என் நன்றிகள் என்று கூறி இருந்தார்.
ரசிகர்கள் கேள்வி:
ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக இருந்த செப் வெங்கட் பட் அவர்கள் நிகழ்ச்சி அடுத்த சீசனில் தொடர மாட்டேன் என்று பதிவிட்டிருந்தார். இவரை அடுத்து தாமுவும் நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டதாகவும் புதிய நிகழ்ச்சியில் புதிய தளத்தில் சந்திப்போம் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனரும், தயாரிப்பு நிறுவனமும் விலகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடருமா? பழைய கோமாளிகள் இந்த சீசனில் கலந்து கொள்வார்களா? ஒட்டுமொத்தமாக வேறு ஒரு நிகழ்ச்சி வரப்போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.