முருகன் பற்றி மனமுருகி பாடி இருக்கும் மோகன் ஜி மகளின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் முதல் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பகாசூரன் :
இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும், நட்டி, ராதாரவி, ராஜன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்து இருந்தார் இயக்குனர் மோகன் ஜி.
மோகன் ஜிக்கு திருமணம் ஆகி மேதினி என்ற மகள் இருக்கிறார். தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பெரிதாக மோகன் ஜி பதிவிட்டது கிடையாது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு மோகன் ஜியின் மகள் கோவில் ஒன்று முருகன் பாடல் ஒன்றை மனமுருகி பாடி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் முருகன் பற்றி மிக இனிமையான மழலை குரலில் பாடி இருக்கிறார்.
சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் மோகன் ஜி மற்றும் அவரது மனைவியுடன் கலந்து கொண்டிருந்தார். அதில் மோகன் ஜி மனைவியிடம் அவருடைய கணவர் எடுக்கும் படங்கள் விமர்சனத்திற்க்கு உள்ளாவது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “என்னுடைய கணவர் உண்மையில் அந்த கருத்தை முன்னிலை படுத்தி படம் எடுப்பதில்லை. அதே போல திரௌபதி படம் எடுக்கும் போது இந்த மாதிரியான பெயர் தனக்கு வரும் என்றும் அவர் எடுக்கவில்லை. அது தானாக நடந்து விட்டது.
மேலும் அந்த பேட்டியில் அவரது மகள் ‘ஜெய் பீம்’ படம் குறித்து பேசி இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது. அதில் தொகுப்பாளர், மோகனின் மகளிடம் ‘நீ அப்பாவோட படம் எல்லாம் பாப்பியா, உனக்கு ரொம்ப புடிச்ச படம் எது’ என்று கேட்க, அதற்கு மோகனின் மகள் ‘ஜெய் பீம் எங்க அப்பா படம் தான்’ என்று கூறியுள்ளார். உடனே மோகன், ஜெய் பீம் அவளுக்கு ரொம்ப புடிக்கும் என்று குறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.