நான் அவரை அவ்வளவு கிண்டல் செய்திருக்கிறேன். இருந்தாலும் அவர் தான் எனக்கு பிடிக்கும்-வெங்கடேஷ் பட்

0
5687
cook-with-comali
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டும் இருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சி ஆகும். சமையல் நிகழ்ச்சி என்றால் மற்ற நிகழ்ச்சிகளை போல அனைவரும் சமையல் தெரிந்து வந்து செய்வது கிடையாது. சமையல் தெரிந்தவர்களுடன் சமையல் செய்ய தெரியாதவர்கள் இணைந்து செய்யும் நிகழ்ச்சி ஆகும். விஜய் டிவி இந்த முறை சமையல் நிகழ்ச்சியில் ஒரு புது மாதிரியான அட்ராசிட்டியை கொண்டு வந்து உள்ளது. மேலும், ஒவ்வொரு வாரமும் புதுப்புது டிஸ் உடன் போட்டியாளர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை.

-விளம்பரம்-

அதுவும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புது நிபந்தனையுடன் போட்டி தொடங்கும். இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சியை விட இந்த சமையல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் விரைவாக பிரபலம் அடைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் யார் வெல்ல போகிறார்கள்? என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அந்த அளவிற்கு அனைவரும் பிரமாதமாக சமையல் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை, புகழ், பாலா, தங்கதுரை, ஷிவாங்கி என்று பலர் பங்கேற்று வருகிறார்கள்.

- Advertisement -

ஆனால், இதில் பங்குபெறும் மெய்ன் போட்டியாளர்களை விட கோமாளியாக வரும் நபர்கள் தான் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். அதில் குறிப்பாக சொல்லப்போனால் இதில் புகழ் தான் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரித்து வைத்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற குக் வித் கோமாளியின் நடுவர்களின் ஒருவராக இருந்து வரும் வெங்கடேஷ் பட்டிடம் யார் இறுதி போட்டிக்கு செல்வார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு பதில் அளித்த வெங்கடேஷ் பட், நான் எனக்கு பிடித்த போட்டியாளர் யார் என்பதை சொல்ல மாட்டேன் ஆனால், அதில் பங்கேற்றவர்களில் எனக்கு புகழ் என்பவர் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். பொதுவாக வெங்கடேஷ் பட்டிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டை பெறுவதே மிகப்பெரிய விஷயம் என்பதால் இந்த வீடியோவை கண்டு மகழ்ச்சி அடைந்த புகழ் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வெங்கடேஷ் பட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement