விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங்கில் இந்த நிகழ்ச்சி தான் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. தற்போது குக் வித் கோமாளியின் செலிபிரிட்டி ஆக சோசியல் மீடியாவில் பரவியிருப்பது நம்ம புகழ் தான். அவர் தன் வாழ்க்கையில் சந்தித்த சில மோசமான நிகழ்வுகளை குறித்து பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியது, என்னுடைய சொந்த ஊர் கடலூர். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் நான் 2008 ஆம் ஆண்டு சென்னையில் வேலைக்கு வந்துவிட்டேன். நான் சென்னைக்கு வெறும் நூறு ரூபாயுடன் வந்தேன். வேலை வாங்கி தரேன் என்று சொல்லி என்னை பல பேர் ஏமாற்றி விட்டார்கள். அதற்குப் பிறகு தான் வெல்டிங் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். வெல்டிங் செய்வதன் மூலம் எனக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டு பிறகு ரூபிங் வேலைக்குப் போனேன். அப்போது என் கால் மீது ரூப் விழுந்து ஐந்து நரம்புகள் கட்டாகிவிட்டது. அதற்கு பிறகு வாட்டர் வாஷ் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். இப்படித்தான் பல வேலைகள் செய்து என் வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தேன். சென்னையில் நான் பார்க்காத வேலையே இல்லை. பிரசாத் ஸ்டூடியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது நான் பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் நட்பு எனக்கு கிடைத்தது. அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அவர் தான் என்னிடம் உனக்கு ஹுயுமர் நல்லா இருக்கு. உன்னுடைய முகம் இந்த நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எனக்கு உற்சாகப்படுத்தினார். பிறகு நான் கலக்கப்போவது யாரு சீசன் 6க்கு ஆடிசனில் கலந்து கொண்டேன். ஆனால், நான் ஆடிஷனிலேயே எலிமினேட் ஆகி விட்டேன். அதற்கெல்லாம் காரணம் என் முடி தான் என்று நினைத்து நான் மொட்டை அடித்துக் கொண்டேன். மீண்டும் ஆடிஷனில் கலந்து கொண்டேன். அதில் என்னை எலிமினேட் பண்ணிட்டாங்க. இதனால் நான் மிகவும் மனமுடைந்து போய் விட்டேன். அதற்கு பிறகு நான் என் சொந்த ஊருக்கு வந்தேன். பின் கணினி சம்மந்தமான வேலைகளை கற்றுக் கொண்டேன்.
ஆனால், எவ்வளவு வேலைகள் கற்றுக்கொண்டாலும் எனக்கு எந்த வேலையிலும் முழு திருப்தி அடையவில்லை. பிறகு டப்பிங் ஸ்டுடியோவில் சிஸ்டம் சர்வீஸ் பண்ணுகிற வேலை இருக்கு என்று சொன்னார்கள். அதற்கு பிறகு நான் சென்னை வந்தேன். சென்னைக்கு வந்ததும் என்னுடைய நேரம் என்னோடு கணினி சம்மந்தமான பொருட்களை எல்லாமே தொலைந்து போய் விட்டது. அந்த பொருள்களை வாங்க எனக்கு வசதியும் இல்லை. அதனால் திரும்பவும் வாட்டர் வாஷ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டேன். அப்புறம் சில நாட்கள் கழிந்து சிரிப்புடான்னு ஒரு நிகழ்ச்சி வந்தது. அதில் பாம்பாட்டி கெட்டப் போடணும் என்று என்னைக் கூப்பிட்டார்கள்.
அப்படியே சின்ன சின்ன ரோலில் எனக்கு வாய்ப்பு வர தொடங்கியது. கலக்கப்போவது யாரு சீசன் 5 முடிந்த பிறகு அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தாமஸ் அவர்கள் எனக்கு லேடி கெட்டப் கொடுத்தாங்க. அப்படியே லேடி கெட்டப் மூலம் தான் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படியே அது இது எது, சிரிச்சா போச்சு என்று என்னுடைய பயணம் தொடங்க ஆரம்பித்தது. அதற்கு பிறகு பல நிகழ்ச்சிகளை பல வித்தியாசமான கெட்டப்புகள் போட்டேன். தற்போது நான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து உள்ளேன். இத்தனை வருடங்களாக நான் உழைத்த உழைப்புக்கு இந்த நிகழ்ச்சியில் எனக்கு நல்ல புகழை கொடுத்து இருக்கு என்று ஆனந்தத்துடன் கூறினார்.