‘பொம்பள சோக்கு கேக்குதோ’ – இளம் நடிகையுடன் ரொமான்ஸ், நாசரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
1784
naasar
- Advertisement -

தன்னை விட நடிகை உடன் படு கிளாமர் காட்சியில் நாசர் நடித்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று கழுவி ஊற்றி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக நாசர் திகழ்ந்து வருகிறார். இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், பாடகர் என பன்முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் எறிடா. இந்த படம் அமேசானில் வெளிவந்து உள்ளது. இந்த படம் சூதாட்டத்தை மையமாக வைத்து திரில்லர் படமாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பிரகாஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நாசர், நிழல்கள் ரவி, சம்யுக்தா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளிவந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் இந்த படம் வெளியாகி உள்ளது.

இதையும் பாருங்க : பெங்களூருக்கு போய் அவர்கிட்ட கத சொன்னேன். ஆனால், கதைய கேட்டுட்டு முடியாதுன்னு சொல்லிட்டாரு – தன் இரங்கல் செய்தியில் மிஸ்கின் வேதனை.

- Advertisement -

இந்த படத்தில் நாசர் வேற லெவல்ல மிரட்டியுள்ளார். இந்த படத்தில் நாசர் அவர்கள் சூதாட்டத்தில் தனக்கு இருக்கும் திறமையால் கோடிக்கணக்கான அளவில் பணம் சம்பாதிக்கிறார். இதனால் அவருக்கு வரும் பிரச்சனைகளை அழகாக கையாண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நாசர் 26 வயது நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இப்படி ஒரு காட்சிகளெல்லாம் நடிப்பதா? எம்டன் மகன் படத்தில் இவர் பேசிய பொம்பள சோக்கு தேவையா என்ற வசனத்தை தற்போது இவருக்கு இந்தப் படக் காட்சிகளை வைத்து ரசிகர்கள் கிண்டல் அடித்தும் கண்டித்தும் வருகின்றனர். மேலும், இந்த படத்தில் இவருடன் கிளாமர் காட்சியில் நடித்த நடிகைக்கு இவருக்கும் இடையே முப்பத்தி எட்டு வயது வித்தியாசம் உள்ளது. இருந்தாலும் இவர் நெருக்கமாக காட்சியில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் அந்த நடிகையுடன் நெருக்கமாக நடித்த காட்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதனை பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement