குக் வித் கோமாளி புகழை ரிஜெக்ட் செய்த விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி – இதோ புகைப்படம்.

0
836
pugazh
- Advertisement -

விஜய் தொலைக்காட்ச்சியில் இருந்து எத்தனை பேர் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார்கள். சிவகார்த்திகேயன், சந்தானம், ரியோ, பிரியா பவானி சங்கர் என்று பலரும் விஜய் டிவியில் இருந்து சென்றவர்கள் தான். அந்த வகையில் சமீப காலமாக விஜய் டிவியில் கலக்கி வரும் புகழும் சினிமாவில் என்ட்ரி ஆகி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. முதல் சீஸனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ட்ரெண்டிங்கிற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை.

-விளம்பரம்-
Pugazh Vijay TV - Home | Facebook

அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளுகிறார் புகழ். சமீபத்தில் புகழ் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் புகழ்.

- Advertisement -

அதில் பேசிய அவர், புகழ் ஏற்கனவே கைதி படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் தற்போது புகழ், சந்தானம் படத்தில் நடித்து வருகிறார். என் பரம்பரையிலேயே வாங்கிய முதல் கார் இதுதான். இதற்கு எல்லாம் காரணம் நீங்கள் கொடுத்த ஆதரவு தான். இதை என்னுடைய மிகப்பெரிய கனவு. எத்தனையோ நபர்களில் காரை நான் தொடைத்திறக்குகிறேன். வாட்டர் வாஷ் செய்திருக்கிறேன். பத்து ரூபாய் இருபது ரூபாய் கொடுப்பார்கள் ஆனால், இன்று நான் சொந்த கார் வாங்கி இருக்கிறேன். என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக பேசி இருந்தார்.

புகழ் ஆரம்ப காலத்தில் வாட்டர் வாஷ் கடை, மெக்கானிக் ஷாப், சென்ட்ரிங் வேலை என்று பல வேலைகளை செய்துள்ளார். அதே போல விஜய் டிவியில் ஆரம்பத்தில் இவர் எடுபுடி வேலைகளை தான் செய்து வந்தார். அதே போல ஆரம்பத்தில் இவர் கலக்கப்போவது யாரு சீசன் 5வில் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் ரிஜெக்ட் ஆகிவிட்டார். இந்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement