அப்பா விஷயத்தில் நான் ராசி இல்லாதவள் – தனது அப்பாவாக நடித்த ரமேஷ் மரணம் குறித்து ஜாக்லின் உருக்கம்.

0
2799
jack

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல்வேறு துயர் சமபாவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பல்வேறு பிரபலமான நடிகர்களின் மரணம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விவேக் காலமாகி இருந்தது தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து கே வி ஆனந்த், பாண்டு என்று பலர் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சினிமாவை போல சின்னத்திரையிலும் அடுத்தடுத்து மரணங்கள் ஏற்பட்டு வருகிறது.

Thaenmozhi B.A - Uratchi Manra Thalaivar - Watch Episode 147 - Subbaiah  Visits Devaraj on Disney+ Hotstar

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நெல்லை சிவா நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இப்படி ஒரு நிலையில் தேன்மொழி சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் காலமாகி இருக்கிறார். இந்த சம்பவம் விஜய் டிவி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இதையும் பாருங்க : குக் வித் கோமாளி புகழை ரிஜெக்ட் செய்த விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி – இதோ புகைப்படம்.

- Advertisement -

அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த ஜாக்லின் கதாநாயகியாக நடித்து வரும் தேன்மொழி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான்.இந்த சீரியலில் ஜாக்லினின் தந்தையாகவும் ஊராட்சி மன்ற தலைவராகவும் சுப்பையா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் குட்டி ரமேஷ். இவர் ஏற்கனவே பல்வேறு சீரியல்களிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் உடல் நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

இவரது இறப்பிற்கு விஜய் டிவி ஆறுதல் கூறியுள்ளது. இப்படி ஒரு நிலையில் இவருடன் நடித்த ஜாக்லின் இவரது மறைவிற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நீங்கள் இல்லை என்பதை நினைக்கையில் அதிர்ச்சியாக இருக்கிறது. அப்பாக்களுக்கு நான் ராசியே இல்லை. மேலும், அவரை பற்றி பேட்டி எடுக்க என்னை தொடர்புகொள்வதை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement