வயசுக்கு மரியாதை இல்லையா – கோமாளியின் செயலால் வருத்தப்பட்ட ராகுல் தாத்தா. யார சொல்றாரு பாருங்க.

0
587
rahul
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், ராகுல் தாத்தா, வித்யூலேகா,ரோஷினி, ஸ்ருதிகா, அம்மு அபிராமி, தர்சன் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.இதில் மிகவும் சீனியர் குக் என்றால் ராகுல் தாத்தா தான்.

-விளம்பரம்-

வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிப்பதற்கு சினிமா துறை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. யாரும் எந்த வயதிலும்எப்படியும் மாறலாம் என்பதற்கு சினிமா ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. இந்த கூற்றை தற்போது நிரூபித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்து உள்ளவர் தான் நம்ம ராகுல்தாத்தா. பல ஆண்டுகள் திரைத்துறையில் இருந்திருந்தாலும், சிலருக்கு ஏதோ ஒரு படம்தான் அவர்களுக்கான அடையாளத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில், ‘நானும் ரெளடிதான்’ படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர், ராகுல் தாத்தா. மாஸ் ஹீரோக்களுக்கு கட்-அவுட் வைக்கும் தீவிர ரசிகர்கள் எல்லோருக்கும்கூட இவர் ஸ்பெஷல் ஸ்டார்தான்.

- Advertisement -

இதையும் பாருங்க : தந்தையின் 70வது பிறந்தநாளுக்கு எதிர்பாராத சர்பிரைஸ் கொடுத்த சினேகா – என்ன தெரியுமா ?

நானும் ரவுடிதான் பட வாய்ப்பு :-

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் ராகுல் தாத்தா. இவரது உண்மையான பெயர் உதயபானு இவர் தமிழ் சினிமாவில் 48 ஆண்டு காலத்திற்கு மேலாக இருந்து வருகிறார். இனிமேல் சினிமா செட் ஆகாது அப்படியே சினிமாவை நம்பி இருந்தால் வாழ முடியாது என்று சொல்லி பேக் செய்து கொண்டு கிளம்ப தயாராக இருந்தோம் அப்போதுதான் தனுஷ் நடிப்பில் மாரி ஒன்று படத்திற்காக புறா வளர்க்கும் ஒரு வயதானவர் கெட்டப்புக்காக என்னை இன்டர்வியூ எடுத்து போட்டோ சூட் எல்லாம் பண்ணினார்கள் இதெல்லாம் முடிந்தவுடன் டைரக்டர் விக்னேஷ் சிவன், என்ட்ரீ கொடுத்தார்.

-விளம்பரம்-

சினிமா எப்பொழுது வேண்டுமாணலும் நமக்கு செய்யும் :

அவர் வைத்திருந்த ஸ்கிரிப்ட் படி நானும் ரவுடிதான் படத்திற்கு ராகுல் தாத்தா கேரக்டருக்கு நான் தான் செட்டாக எனக்கு இவர் வேண்டுமென்று கூறினார் தனுஷ் சாரோ சரி எடுத்துக் கொள்ளுங்கள் என்று என்னை கடனாக கொடுத்துவிட்டார். இப்படித்தான் நானும் ரவுடிதான் படத்திற்கு நான் வந்ததேன். அந்த படத்தில் நடித்திருந்தால் ஒரு சீனுக்கு வந்துவிட்டு போயிருப்பேன் நானும் ரவுடிதான் படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் அவர்களோடு தொடர்வேன் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு பெயரும் வாங்கி கொடுத்தது. சினிமாவை பொறுத்தவரை நம்பிக்கையிடன் இருக்க வேண்டும். சினிமா எப்பொழுது வேண்டுமாணலும் நமக்கு செய்யும் என்று தெரிவித்தார்.

3 சீசனாக என்னை ஆழைத்தார்கள் :-

குக் வித் கோமாளி ஷோவில் சீசன் 1 சீசன் 2 என அனைத்தும் ஆரம்பிக்கும் போது என்னை தொடர்பு கொண்டு வாங்க வாருங்கள் இந்த மாதிரி எங்களுக்கு குக்காக வந்து எங்களுக்கு ஷோ பண்ணி கொடுங்க எனக்கு கேட்பார்கள். அப்போது கொரோனா காலகட்டம் என்பதாலும் கொஞ்சம் பிஸியாக இருந்தாலும் டைம் இல்லாமல் இருந்தது. பிறகு குக் வித் கோமாளி சீசன் 3 யில் மறுபடியும் என்னை தொடர்பு கொண்டு வாருங்கள் எங்களுக்கு இது மட்டும் பண்ணி கொடுங்க ஒரு எபிசோடாக வந்து விட்டுப் போங்கள் என்று கூப்பிட்டார்கள்.

நான் சரி என்று சொன்ன உடனே புரோடக்ஷன்ல இருந்து கார் அனுப்பி என்னை கையோடு கூட்டி சென்று விட்டார்கள். உங்களுக்கு சமைக்க தெரியாது என்று கூறுகிறார்களே அது உண்மையா என்று அவரிடம் கேட்டதற்கு ராகுல் தாத்தா நான் சமைப்பதற்காக NON-VEG சிக்கன் மட்டன் இது போன்ற உணவுகள் செய்யலாம் என்று முடிவெடுத்து பிரிப்பேர் செய்து இருப்பேன் ஆனால் அங்கு சென்றாள் காய்கறிகளை கொடுத்து விட்டு காய்கறிகளை சமைக்க சொல்வார்கள் காய்கறியில் என்ன செய்ய முடியும் அதுவும் கீ ரைஸ் போன்ற உணவுகள் செய்து கொடுப்பேன் செஃப் தாமு சார் நான் செய்யும் உணவுகளை பார்த்து பாராட்டுவார்.

என்னை கலாய்க்கு போது வருத்தமாகதான் இருக்கும் :-

இந்த ஷோவில் 20 வயது பையன் என்னை என்னை கலாய்ப்பான் அப்பொழுது மன வருத்தமாக தான் இருக்கும் நானும் திருப்பி பதிலுக்கு கலாய்த்து விடுவேன் இல்லையென்றால் தக் லைப் கொடுத்து விடுவேன் கோமாளிகள்னாலே குக்குகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் தானே அங்கே இருக்கும் மணிமேகலை,தாமு சார், பாலா போன்ற அனைவரும் என்னுடைய ரசிகர்கள் தான். அப்போது தாமு சார் சொல்லுவார் அவருடைய வயசு என்ன உன் வயசு என்ன அவர் வயதுக்கு மரியாதை கொடுத்து பேசுங்கள். என்று அனைவரிடம் அன்பாகவும் சொல்லுவார் அந்த ஷோவில் நான் பண்ணியது எனக்கு இன்னும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை தந்தது. ரோடுகளில் வெளியே செல்லும்போதெல்லாம் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகள் எல்லாம் அங்க பாரு ராகுல் தாத்தா போகிறார் என்று என்னிடம் கை கொடுப்பார்கள் அந்த அளவுக்கு இந்த ஷோ என்னை வளர்த்தது என்று ராகுல் தாத்தா கூறினார்.

Advertisement