பிக் பாஸ் 7 பைனலிஸ்ட் முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் வரை – CWC5 போட்டியாளர்களின் பைனல் லிஸ்ட்

0
246
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி :

இப்படி பட்ட நிலையில் கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி இருந்தது. இதில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன், ராஜ், பாக்கியலட்சிமி VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்ற பலர் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்தது. அதோடு இந்த முறை கோமாளியாக இருந்த சிவாங்கி போட்டியாளராக கலந்து இருந்தார்.

குக் வித் கோமாளி 4:

இந்த நிகழ்ச்சியில் மைம் கோபி, விசித்ரா, கிரன், சிவாங்கி, ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன் ஆகிய ஆறு பேரும் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மைம் கோபி ஆகியிருக்கிறார். இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டி, மூன்றாவது இடத்தை விசித்திரா பிடித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து பலருமே ஐந்தாவது சீசன் எப்போது என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப தொடங்கி விட்டார்கள். ஆனால், சிலர் குக் வித் கோமாளி சீசன் 5 இல்லை என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி குறித்த தகவல் தான் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி:

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பிப்பது தான் விஜய் டிவியுடன் வழக்கம். அந்த வகையில் இந்த சீசன் வரும் 27 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீஸனின் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மத்தம்பட்டி ரங்கராஜ் தாமுவுடன் நடுவராக இணைந்து இருக்கிறார்.விஜே ரக்சன், மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள். அதேபோல் இதுவரை வந்த சீசனங்களில் கலந்து கொண்ட கோமாளிகளின் சிலர் இந்த சீசனிலும் வருவார்கள்.

sujitha

குக் வித் கோமாளி 5 பட்டியல்:

புது கோமாளிகளும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் நடிகை வடிவுக்கரசி, டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, நடிகை மாளவிகா மேனன், பிக் பாஸ் 7 விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனவாக நடிக்கும் ஹேமா, நடன இயக்குனர் ஸ்ரீதர் மகள் அக்ஷதா ஆகியோர் விஜய் டிவி தரப்பில் பேசப்பட்டு உறுதியாகப்பட்டிருக்கிறது. இன்னும் சில போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Advertisement