மனஸ்தாபத்தை மறந்து சேரன் மகள் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த பார்த்திபன் – சேரனின் ரிப்ளை

0
322
- Advertisement -

சேரன் மகள் திருமணத்திற்கு பார்த்திபன் வாழ்த்து கூறியுள்ளார். சேரனுக்கு செல்வராணி என்ற மனைவியும், நிவேதா மற்றும் தாமினி என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் தனது மூத்த மகள் தாமணிக்கு திருமணத்தை முடித்துள்ளார் சேரன். கடந்த 22ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று திருமண புகைப்படங்களை பகிர்ந்ததுள்ளார் சேரன்.

-விளம்பரம்-

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘ ‘நேற்று நடந்த என் மகளின் திருமணத்தில் எனது பலமாய் நின்று காலையில் இருந்து மாலை வரை அனைத்து வேலைகளையும் சந்தோசமாய் பார்த்து வருகை தந்த அனைவரையும் மகிழ்வாய் அனுப்பிவைத்த என்னுடன் பணிபுரிந்த என் தம்பிகள் ( இயக்குனர் ஆனவர்களும் வருங்கால இயக்குனர்களும்) அனைவருக்கும் நன்றி.திருமணத்தை மனப்பூர்வமான வாழ்த்துடன் நடத்தித்தந்த திரு.ரவிக்குமார் சார்

- Advertisement -

மரியாதைக்குரிய திருமதி ரவிக்குமார் அவர்களுக்கும், எங்கள் பெருமைக்குரிய இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா, அன்பு அண்ணன் சீமான், திருமதி சீமான் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக மகிழ்ச்சியும் நன்றியும். என்று பதிவிட்டுள்ளார். சேரனின் மகள் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பார்த்திபனும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய பார்த்திபன் ‘ சேரன் ஒரு சின்சியரான இயக்குனராக இருந்தாலும், மற்றவர்கள் காயப்படுவது குறித்து அவர் கவலைப்பட மாட்டார். அவருடைய பாரதிகண்ணம்மா படம் சாதிகள் ஒழிப்பை பற்றி பேசியது. ஆனால் படம் ரொம்ப சீரியஸாக இருப்பதை உண்ர்ந்தேன். அதன்பிறகு தான் நானும் வடிவேலுவும் வேறு ஒரு படத்துக்காக வைத்திருந்த காமெடி டிராக்கை பயன்படுத்தி பாரதிகண்ணம்மாவை கொஞ்சம் கலகலப்பாக மாற்றினோம்.

-விளம்பரம்-

ஆனால், நான் கொடுத்த ஐடியா ஒர்க் அவுட் ஆகிடிச்சி என்றால் அவருக்கு பெயர் கிடைக்காது என்று அந்த காட்சியை அவர் படத்தில் வைக்க மறுத்தார். பின்னர் எப்படியோ சமாதானம் செய்து அந்த காட்சியை வைத்தோம். ஆனாலும் சேரன் நிறைய தகராறு செய்து, ஊர் முழுவதும் எனக்கு கெட்டப் பெயரை உண்டாக்கினார். என்னோட கதையில் பார்த்திபன் நுழைகிறார் என குற்றஞ்சாட்டினார்.

சேரன் குறித்து மேலும், பேசிய பார்த்திபன், அவரிடம் எனக்கே பிடிக்காத சில விஷயங்களும் இருக்கிறது. ஏதோ ஒரு குப்பையான படத்தை பார்த்துவிட்டு, என்ன இது பார்த்திபன் படம் போல் இருக்கிறது என மேடையிலேயே பேசினார். மற்றவர்களை காயப்படுத்துவதை பற்றி அவர் கவலையே பட மாட்டார். அதில் தான் அவர் ஸ்பெஷல் என்று கூறி இருந்தார் பார்த்திபன்.

இதனை தொடர்ந்து இதுகுறித்து விளக்கமளித்த சேரன் ‘ஏதோ ஒரு தவறான புரிதலில் சொல்லியிருக்கிறார்.. அவர் மேல் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்.. எந்தப்படத்தை பார்த்து அப்படிச்சொன்னேன் என தெரியவில்லை.. சொல்லியிருந்தால் அது கண்டிப்பாக குப்பை படமாக இருக்காது.. சற்று டபுள்மீனிங் தூக்கலாக இருந்திருக்கும். அதனால் சொல்லியிருப்பேன்’ என்றும் கூறி இருந்தார்.

Advertisement