இன்டர்வியூ போய்யி வேல கிடைக்குமா கிடைத்தானு ஒரு டென்சன் இல்லாதா வாழ்க்கை உங்களுது, சூப்பர் – ரசிகர் கமென்டிற்கு ஷிவாங்கி கொடுத்த பதில்.

0
108
shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

-விளம்பரம்-
shivangi

அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள்.தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது.

இதையும் பாருங்க : டைடிலை வச்சிட்டு அப்புறம் படம் எடுத்தா இப்படி தான் – Vjsயின் மாமனிதன் எப்படி ? முழு விமர்சனம் இதோ.

- Advertisement -

Cwc ஏற்படுத்தி கொடுத்த பிரபலம் :

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவாங்கி . இவர் பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

Cwcயால் கிடைத்த சினிமா வாய்ப்பு :

இவர் முதல் சீசனில் வந்திருந்தாலும் இரண்டாவது சீசன் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை உருவாகி இருந்தது. அதிலும் நிகழ்ச்சியில் அஸ்வின்- சிவாங்கி உடைய காம்போ வேற லெவல் என்றே சொல்லலாம். இவர்கள் இருவருக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் கும்பல் இருந்தது. அந்த அளவிற்கு இரண்டாம் சீசன் நிகழ்ச்சியில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி எல்லாம் வேற லெவல். அதேபோல் சிவாங்கியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பாடி வருகிறார்.

-விளம்பரம்-

மிடில் கிளாஸ் ரசிகர் போட்ட கமன்ட் :

அதே போல சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்து இருந்தார் ஷிவாங்கி. என்னதான் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் இவரை திட்டி தீர்க்கும் ரசிகர்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் நெட்டிசன் ஒருவர் ‘உங்களுக்குலாம் ஒரு கம்பெனிநிலை இன்டர்வியூ அட்டண்ட பண்ணிட்டு வேலை கிடைக்குமா கிடைக்காதானு டென்சன் இல்லாத வாழ்க்கை கிடைச்சி இருக்கு சூப்பர். எல்லா மிடில் கிளாஸ் குடும்பமும் எல்லா சூழ்நிலையிலும் ஒரு நெருக்கத்தோடு தான் சிக்கி கொண்டு இருக்கிறோம் என்று பதிவிட்டு இருந்தார்.

வேலை பண்ணா தான் இருக்க முடியும் :

இதற்கு பதில் அளித்த ஷிவாங்கி ‘உங்க நிலை புரியுது, ஆனா எங்களுக்கும் நான் பண்ற ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கு புடிக்குமா புடிக்காதான்னு ஒரு டென்சன் இருக்கும். உங்களுக்கு பிடிக்க பிடிக்க வேலை பண்ணா தான் எங்களுக்கு இங்க இருக்கவே முடியும். இந்த வாழ்க்கையும் யார் வாழ்க்கையும் ஈஸி கிடையாது. இதில் பணக்காரன், மிடில் கிளாஸ், ஏழை எல்லாருக்கும் அவரர் வாழ்கை ஒரு போராட்டம் இருக்கும். #ஆர்ட்டிஸ்ட்வாழ்கை’ என்று பதில் அளித்துள்ளார்.’

Advertisement