11 ஆண்டுகள் கழித்து தீபக் நடிக்கும் புதிய தொடரின் ப்ரோமோ – ஸ்ருதி நடிப்பார்ன்னு பாத்தா இவங்க தான் ஜோடியா. (ரசிகர்கள் அப்செட்)

0
1111
thendral
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சில் சீரியலின் முன்னோடியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில், சன் டிவியில் 3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள். இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து மரண களாய் களாய்த்தனர்.

-விளம்பரம்-

2009 ஆம் ஆண்டு தொடங்கி 6 வருடங்கள் ஓடிய இந்த தொடர் 1340 எபிசோடுகளை கடந்தது.அண்ணி, கீதாஞ்சலி, மனைவி, செல்வி, பந்தம், அரசி, திருமதி செல்வம், ரோஜா கூட்டம் என்று இதுவரை 30-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார் தீபக் அதேபோல தனது சிறப்பான நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் இவர் நடித்த தென்றல் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

இறுதியாக கேப்டன் தொலைக்காட்சியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘காதல்’ என்ற சீரியலில் நடித்தார் தீபக். அதன் பின்னர் வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீரியலில் களமிறங்க இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் தீபக் நடிக்க இருக்கிறார்.

இந்த தொடரில் தென்றல் தொடரில் தீபக்கிற்கு ஜோடியாக நடித்த ஸ்ருதி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ‘லட்சுமி ஸ்டோர்ஸ’ சீரியல் நடிகை நக்ஸத்ரா நாகேஷ் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த தொடரின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. தென்றல் தொடருக்கு பின்னர் தீபக் – ஸ்ருதி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement