ஷிவாங்கியின் +1 போட்டோவ பாத்திருக்கீங்களா – அட உண்மையா அப்படி தான் இருந்திருக்கார்.

0
1115
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-
Cook With Comali 20th February 2021 Episode Highlights: Pugal As Maari,  Shivangi as Samantha, Task & Elimination Updates! - TheNewsCrunch

அதிலும் புகழ், பாலா, ஷிவானி, மணிமேகலையின் ரகலைகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார். பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான ஷிவாங்கி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அதில் பாதியிலேயே எலிமினேட் ஆனார்.

இதையும் பாருங்க : இத பண்ணாம இருந்திருந்தா மட்டும் உங்க அம்மா, மனைவிக்கு மகளீர் தின வாழ்த்த சொல்லுங்க – அனிதா சம்பத்.

- Advertisement -

அதன் பின்னர் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த சீசன் இறுதியில் ஷிவாங்கிக்கு ‘சிம்மக் குரல் சிங்காரி’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மகிழ்ச்சியுடன் வாங்கிய ஷிவாங்கி, நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பொழுது அனைவரும் என்னை மிமிக்ரி செய்கிறீர்கள், இது உன்னுடைய உண்மையான குரல் இல்லை, நடிக்கிறேன் என்று பலவிதமாக கிண்டல் செய்திருக்கிறார்கள்.

ஆனால், இது தான் என்னுடைய உண்மையான குரல். இது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால், இன்று இந்த குரல் எனக்கு ஒரு விருதினை பெற்றுக் கொடுத்து உள்ளது என்று ஆனந்த கண்ணீருடன் கூறியிருந்தார். ஆனால், போன சீசனை விட இந்த சீசனில் இவருக்கு ஏகப்பட்ட ரீச். அதிலும் இவருக்கு என்ன கெட் டப் கொடுத்தாலும் செம கியூட். அப்படி சமீபத்தில் இவர் நீதானே பொன் வசந்தம் சமத்தா போல வந்து அனைவரையும் கவர்ந்தார். இப்படி ஒரு நிலையில் இவரின் பள்ளிப்பருவத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement