தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ் – மேடையிலேயே பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்த மன்சூர் அலிகான்

0
904
CoolSuresh
- Advertisement -

பட விழாவில் கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் எல்லை மீறி இருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வெந்து தணிந்தது காடு மற்றும் எஸ்டிஆரின் பத்து தல படத்தின் என்ற வசனம் மூலம் பிரபலமான கூல் சுரேஷ். இவர் படம் முடிந்த பிறகு வந்து ரீவிவ் சொல்லுவார். இதற்காகவே பலரும் காத்துக்கொண்டிருப்பார். இப்படிப்பட்ட நிலையில் “நான் கடவுள் இல்லை” படத்தின் ரீவிவ் சொல்லும் போது அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை செய்துள்ளர் கூல் சுரேஷ். சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கூல் சுரேஷ்.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் இவர் படங்களில் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கிய இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார்.

- Advertisement -

பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். சமீப காலமாக அணைத்து ஹீரோக்களின் படங்களை வித்யாசமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் மன்சூர் அலிகான் பட விழாவில் கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் எல்லை மீறி இருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சரக்கு. இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விநாயகர் சதுர்த்தி அன்று சென்னையில் நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு பக்தி பாடலை எழுதி இசை அமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கூல் சுரேஷும் கலந்துகொண்டார். இந்த விழாவில் கூல் சுரேஷ் பேசும் போது ‘ மேடையில் அனைவருக்கும் மாலை போடீர்கள் ஒருத்தருக்கு மாலை போட்டீர்களா என்று அருகில் இருந்த தொகுப்பாளினி மீது சட்டென மாலையை போட்டார் இதனை சற்றும் எதிர்பாராத அந்த தொகுப்பாளனை கூல் சுரேஷ் மாலை போட்டதுமே அதனை கழட்டி எறிந்து விட்டு முகம் சுளித்தார்.

இந்த செயலைக் கண்டு அரங்கில் இருந்து அனைவருமே ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தார்கள்.மேலும் மேடையில் அமர்ந்திருந்த மன்சூர் அலிகான் ‘ டேய் இதெல்லாம் தப்புடா இப்படி எல்லாம் பண்ணக் கூடாது ‘ என்று பேசினார். மேலும், மன்சூர் அலிகான் மைக்கில் வந்து பேசிய போது ஒரு பெண்ணை இப்படி நடத்தலாமா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க ‘நான் தான் உடனே கண்டித்து விட்டேனே, இருந்தாலும் அவரை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைக்கிறேன்’ என்று கூல் சுரேஷை அழைத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னார் இதனால் கூல் சுரேஷும் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

Advertisement