இந்த காரணத்தால் தான் 14 நாட்கள் தனிமைபடுத்திக்கொண்டேன். அஜித் பட நடிகை விளக்கம்.

0
2608
shradhasrinath
- Advertisement -

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி கொத்து கொத்தாக மக்களை கொன்று வருகிறது. ஒட்டுமொத்த உலகமும் அச்சத்தின் உச்சத்தில் உள்ளார்கள். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 2301 பேர் பாதிக்கப்பட்டும், 56 பேர் பலியாகியும் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதால் பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-

ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏழை மக்கள் முதல் பிரபல நடிகர்கள் வரை என ஒருவரையும் இந்த கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.

- Advertisement -

அந்த வகையில் பிரபல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவர்களையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. ஷ்ரத்தா ஸ்ரீநாத் அடிக்கடி சென்னை மற்றும் பெங்களூருக்கு விமானத்தில் சென்று வந்துள்ளதால் கர்நாடக சுகாதார துறை அதிகாரிகள் அவரை வீட்டில் தனிமை படுத்தி இருக்க வேண்டும் என்று சொன்னதாக செய்திகள் சோசியல் மீடியாவில் வந்து கொண்டு இருக்கிறது.

ஆனால், இந்த செய்தி உண்மை இல்லை என நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ட்விட்டரில் கூறியுள்ளார். நான் மார்ச் 12 முதல் 15ம் தேதி வரை சென்னை மற்றும் ஐதராபாத்திற்கு சென்று வந்தேன். அந்த விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. மேலும், கர்நாடக மருத்துவ துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுவதும் எல்லாம் உண்மையில்லை.

-விளம்பரம்-

அவர்கள் வரவும் இல்லை என்னை தனிமையில் இருக்கவும் சொல்லவில்லை. நானே 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை தேர்ந்தெடுத்தேன். மருத்துவராக உள்ள என் உறவினர் அளித்த அறிவுரையின்படி தான் நான் இந்த முன்எச்சரிக்கை நடவைடிக்கை எடுத்தேன். கடந்த 29 ஆம் தேதியோடு 14 நிறைவடைந்து விட்டது. நான் ஒரு பொறுப்பான குடிமகளாக இதை செய்தேன் என கூறி உள்ளார். இதன் மூலம் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனக்கு கொரோனா என பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

Nerkonda Paarvai Review: Ajith hits it out of the park in a solid ...

தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். 2017ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து பிளாக் பஸ்டர் படமான ” விக்ரம் வேதா” திரைப்படம் தான் இவரை சினிமா துறையில் தூக்கிவிட்டது. அதனை தொடர்ந்து இவர் கன்னடம், தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது விஷாலுக்கு ஜோடியாக சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement