தண்ணீர் குடிங்க- ரொனால்டோ-வின் சிறிய செய்கையால் கோலா நிறுவனத்திற்கு இத்தனை கோடி நஷ்டமாம் ?

0
1338
- Advertisement -

பத்திரிகையாளர் சந்திப்பின் போது கோகோ – கோலா பாட்டில்களை கொஞ்சம் தள்ளி வைத்ததால் அந்த நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக கால்பந்து விளையாட்டில் ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.  2020 ஆம் ஆண்டிற்கான யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த வாரம் ஐரோப்பாவில் தொடங்கியது. கடந்த 15 ஆம் தேதி இந்த தொடரில்  நடப்பு சாம்பியனான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் ஹங்கேரி அணியும் மோதினர். 

-விளம்பரம்-

இந்த போட்டியில் போர்ச்சுகல் 3 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. மேலும், இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி சார்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தார். இதற்கிடையே இந்த போட்டிக்கு முன்பாக காலையில் நடக்கும் வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. யூரோ கோப்பையின் முக்கிய ஸ்பான்சரான கோக்க-கோலாவின் இரண்டு பாட்டில்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேட்டியளிப்பவருக்கு முன்பாக வைக்கப்படுவது வழக்கம். 

- Advertisement -

ஆனால், தனக்கு முன்னாள் கோக்க-கோலாவின் பாட்டில்கள் வைக்கப்பட்டு இருப்பதை கண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ கோக்க-கோலா பாட்டில்களையும்  எடுத்து கீழே மறைத்துவைத்த ரொனால்டோ, தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து ‘’தண்ணீர் குடியுங்கள்’’ என்றார். ரொனால்டுவின் இந்த செயலால் பெரும் சர்ச்சை எழுந்தது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக யூரோ கோப்பையின் ஸ்பான்சராக இருக்கும் கோக்க-கோலாவின் பிராண்டை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுவிட்டார் என்பதால் ரொனால்டோ மீது யூரோ கோப்பை அமைப்பு அபராதம் விதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

போர்ச்சுகல் மட்டுமின்றி  ஐரோப்பிய கண்டம் முழுவதுமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் ரொனால்டோவின் இந்த ஒரு செய்கை ஐரோப்பிய பங்கு வர்த்தகத்தில்  கோகோ – கோலாவிற்கு பெரும் நஷ்டத்தை உருவாக்கியுள்ளது. ரொனால்டோவின் செய்தியாளர் சந்திப்புக்கு முன்பாக 5,353 ரூபாயில் இருந்த ஒரு கோக்ககோலா ஷேரின் மதிப்பு, இந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பின் 5,267 என இறங்கியதுபிறகு சில நிமிடங்களில் 4 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 29,337 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

-விளம்பரம்-

கோகோ கோலா பானங்களுக்கு எதிராக ரொனால்டோ இப்படி பேசுவது முதல்முறையல்ல. ஏற்கெனவே ‘’என் மகன் எவ்வளவு சொல்லியும் கோக், ஃபான்ட்டா குளிர்பானங்களை குடிக்கிறான். எனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் அவன் செய்கிறான்’’ எனப் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை இவரின் கோலா நிறுவனத்திற்கு எதிரான நேரடி செயல்பட்டால் அந்த நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்து உள்ளது.

Advertisement