ஏன் போறோந்தோம்னு இருக்கு, பேசாம ஒரு வேளைக்கு போய் இருக்கலாம் – மீடியாவை நம்பி தற்போது விரக்தி அடைந்த இளம் கோமாளி

0
2275
Sakthi
- Advertisement -

அமைதியை தேடி போகிறேன் என்று எமோஷனலாக குக் வித் கோமாளி பிரபலம் சக்தி வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்கள் ஒளிபரப்பாகி வெற்றிகராக முடிவடைந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருப்பதற்கும் அதுவே காரணம் என்று சொல்லலாம். அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு நடுவர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

குக் வித் கோமாளி :

ஒவ்வொரு சீசனும் புது புது வித்தியாசத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த முறை கோமாளியாக சிவாங்கி குக்காக வந்து இருக்கிறார். வழக்கம் போல் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்ச்சி சென்று இருக்கிறது. அதோடு இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

குக் வித் கோமாளி 4 :

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பேருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. உதாரணத்திற்கு புகழை சொல்லலாம். தற்போது அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எனக்கு கை கொடுக்கவில்லை என்று சக்தி பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விடுகிறது. சக்தி டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானார்.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி சக்தி:

பின்னர் இவர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை பிரபலமாக்கியது. மேலும், இவர் தொடர்ந்து இரண்டு சீசன்களில் கலந்து கொண்டார். இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் பிஸியாக இருப்பார். அது மட்டும் இல்லாமல் இவர் அடிக்கடி லைவ் வந்து ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் சக்தி கையில் அடிபட்டு கட்டுடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஹாய் நான் ஒரு சின்ன பிரேக் எடுக்க எடுத்துக்கொள்ளப் போகிறேன். பிசிகல் ஆகவும் சரி, மெண்டல் ஆகவும் சரி கொஞ்சம் மனதிற்கு ஒரு மாதிரியாக இருக்கு.

சக்தியின் எமோஷனல் வீடியோ:

நான் இப்போது பழைய சக்தியாக இல்லாத மாதிரியான ஒரு பீல் இருக்கு. மீடியாவில் நிறைய விஷயத்தை நான் புரிந்து கொண்டேன். ஆனால், எல்லாத்தையும் நான் இப்போது சொல்ல முடியாது. கொஞ்ச நாளைக்கு கண்காணாத இடத்துக்கு போயிட்டு வரேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார். இப்படி இவர் பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள், கஷ்டப்படாதீர்கள், எல்லாம் சரியாகிவிடும். உங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி கை கொடுக்கவில்லையா? என்றெல்லாம் ஆறுதல் கூறி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement