தமிழில் பல ஹிந்தி சீரியல்கள் டப் செய்து வந்தாலும் தமிழ் சீரியலுக்கு இணையாக ஓடிய சீரியல் என்றால் அது பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “உள்ளம் கொள்ளை போகுதடா” என்ற தொடர் தான்.
இந்த சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் நடிகை சாக்ஷி தான்வார். ராஜஸ்தானை சேர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு துர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் 1998 ஆம் ஆண்டு இந்தி சீரியல்களில் நடிக்க துவங்கி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
அதன் பின்னர் பல்வேறு சீரியல்கள் நடித்து வந்த இவர் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான”டங்கள்” படத்தில் அமீர் கான் மனைவியாக நடித்திருந்தார்.
தற்போது 45 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. மேலும், இவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்று சில வதந்திகளும் பரவி வந்தது. இந்நிலையில் நடிகை சாக்ஷி தான்வார் ஒரு 9 மாத ஆதரவற்ற பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளார். அவரது பெயர் தித்யா அப்படி என்றால் லட்சுமி என்று அர்த்தம். திருமணம் ஆகவில்லை என்றாலும் நடிகையின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.