சர்கார் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ரஜினி நயன்தாரா அவர்கள் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரும் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் தலைவர் படம் என்றாலே போதும் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு எனர்ஜி கிடைத்து விடும். சமீப காலமாகவே இவருடைய படங்கள் எல்லாமே மாஸ் காட்டி வருகின்றது. கடைசியாக இவர் நடித்த பேட்ட படத்தில் ரஜினி பயங்கர எனர்ஜியுடன் களமிறங்கினார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் இந்தப் படத்தில் நம்ம தலைவர் வெறித்தனம் காட்டியுள்ளார்.
இதையும் பாருங்க : தனது தாத்தாவின் ‘தர்பார்’ படத்தின் ஸ்பெஷல் ஷோவை கண்ட பேரன். வைரலாகும் புகைப்படம்.
கதைக்களம்:
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் இந்த படத்தில் ஆதித்ய அருணாச்சலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார். இவர் டெல்லியில் யாருக்கும் அஞ்சாத சிங்கம் போலீசாக வேலை செய்பவர். தன்னுடைய போலீஸ் வேலையில் பல என்கவுண்டர்கள் செய்து ரவுடிகளை துவம்சம் செய்து வருகிறார். இவர் பெயரைக் கேட்டாலே ரவுடிகள் அனைவரும் பதுங்கும் அளவிற்கு போலீஸ் ரவுடியாக நடித்து உள்ளார். பின் திடீரென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு டெல்லியில் இருந்து மும்பைக்கு டிரான்ஸ்பர் கிடைக்கிறது. ஆனால், மும்பையில் உள்ள பல பேர் போலீஸ் பயம் இன்றி, பல அட்டுழியங்களை செய்து வருபவர்கள்.
ரஜினிகாந்த் அவர்கள் வேலையில் சேர்ந்த இரண்டு நாளிலேயே மும்பையில் போதை பொருள் விற்பவர்கள், பெண்களை கடத்துபவர்கள், கொலை செய்பவர்கள் என அனைவரையும் கைது செய்கிறார். அதோடு மும்பை சிட்டியையே தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வருகின்றார். இப்படி தவறு செய்பவர்களை கைது செய்து போது பிடிக்கும் ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் மகனும் மாட்டிக் கொள்கிறார். அவனை வெளியே விடாமல் ரஜினி பல போராட்டங்களை சந்திக்கிறார். அந்த தொழிலதிபர் தன்னுடைய பவரை பயன்படுத்தி அவருடைய மகனை வேறு நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றார். ஆனாலும், ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய தந்திரத்தாலும், புத்திசாலித்தனத்தின் அந்த தொழிலதிபர் மகனை கொன்று விடுகிறார்.
இது கடைசியில் தான் தெரிகிறது. உண்மையிலேயே தொழில் அதிபர் மகன் இல்லை. உலக அளவில் மிகப் பெரிய டானாக இருக்கும் சுனில் ஷெட்டி அவர்களின் மகன் என்று தெரிகிறது. பிறகு சுனில் ஷெட்டிக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே நடக்கும் ஆட்டம் தான் படத்தின் மீதி கதை. உண்மையிலேயே ரஜினிகாந்த் அவருக்கு 70 வயது என்று சொன்னால் நம்ப முடியாது. அந்த அளவிற்கு அவருடைய நடிப்பு உள்ளது. சின்சியரான, டெரரான போலீஸ் ஆபீசராக இருக்கும் ரஜினிகாந்துக்கு நயன்தாராவுடன் காதல் ஏற்படுகிறது. இவர்கள் இருவரின் காட்சிகளும் அதிர வைத்திருக்கிறது. அதுவும் இரண்டாம் பாதியில் ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டை காட்சிகள் எல்லாம் வேற லெவல் என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு பட்டைய கிளப்பி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் செம்மையா வைத்து செஞ்சிருக்காரு. படம் முழுவதும் விறுவிறுப்பாக சென்று கொண்டு உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக நிவேதா தாமஸ் தன்னுடைய கதாபாத்திரத்தை அழகாக நடித்து உள்ளார். படத்தில் யோகி பாபு காமெடி சொல்லவா வேண்டும் அட்ராசிட்டி. வழக்கம் போல தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார் நடிகை நயன்தாரா. அனிருத் இசையில் வந்த ஒவ்வொரு பாடல்கள் எல்லாமே மாஸ்.
இதையும் பாருங்க : வித்யாசமாக ‘மிஸ் விக்கி’ என்று காட்டிய நயன். புகைப்படத்தின் மூலம் வதந்திக்கு முற்றி புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்.
ப்ளஸ்:
தர்பார் படத்தின் ஒளிப்பதிவு, இசை எல்லாமே வேற லெவல்.
ரஜினிகாந்தின் நடிப்புக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார்.
படம் பார்க்க பார்க்க விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. எந்த ஒரு தருணத்திலும் போரடிக்கவில்லை.
ஆக்ஷன், காமெடி, காதல், சண்டை காட்சி எல்லாமே மிரட்டலாக உள்ளது.
அனிருத் இசை சும்மா கிழி.
மைனஸ்:
படத்தின் கிளைமாக்ஸ் கொஞ்சம் அழுத்தமாக வைத்திருக்கலாம்.
வில்லன் கதாபாத்திரம் இன்னும் ரஜினிகாந்த்துக்கு மிரட்டலாக இருந்திருக்கலாம்.
நயன்தாராவை படத்தில் டம்மி ஆக்கியுள்ளார்கள்
படத்தின் அலசல்:
இதுவரை காணாத தோற்றத்தில் ரஜினிகாந்த் அவர்கள் உள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் இன்றைய இளைஞர்கள் இருக்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை ரஜினிகாந்த் அவர்கள் நிரூபித்துவிட்டார். மொத்தத்தில் “தர்பார் படம்– சும்மா கிழி”.