பிரபல டான்சருடன் பப்பில் நடனமாடிய திவ்ய தர்ஷினி ! வைரலாகும் வீடியோ

0
3271
dd

விஜய் டீவியில் பல ஆண்டுகளாக முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டி.டி என்ற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது நண்பரும் காதலருமான துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருடன் இரு வீட்டார் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் திருமணம் வாழ்க்கை ரொம்ப காலம் நீடிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்துவிடலாம் என விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இதற்கு காரணம் கணவர் ஸ்ரீகாந்திற்கு டி.டியின் செயல்கள் சுத்தமாக பிடிக்கவில்லையாம். திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் எனக் கூறியும் கேட்காமல் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ளார் டி டி. மேலும் இந்த வருட துவக்கத்தில் சுச்சி லீக்கில் டி.டி வேறு ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போல ஒரு போட்டோ வெளியானது. இதனால் கணவர் ஸ்ரீகாந்த் இன்னும் கடினமாக உணர்ந்தார்.

அதுபோக டி.டி பல பார்ட்டிக்களுக்கும் சென்றுவிவாராம். இதன் காரணமாக இருவருக்கும் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை வந்து நிற்கிறது.

மேலும், அவர்களின் விவாகத்திற்கு காரணமாக சொல்லப்படும் டி.டியின் பார்ட்டி வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் டி.டி, மற்றும் டான்சர் சதீஸுடன் பார்ட்டி டேபிளில் உட்கார்ந்து ஆடியபடி உள்ளது. பாப்பவர்கள் பலரும் டிடிக்கு இப்படி ஒரு திறமையும் உள்ளதா என மெச்சி வருகின்றனர். பலரும் பல விமர்சனங்களை வைக்கும் வேளையில் இது டி.டியின் பர்சனல் லைப் என விடுவது தான் நாகரீகமான செயலாகும்.